பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

go down

654

Gopherspace


பதிவேட்டுச் சுட்டுமுனையை நகர்த்துகிற தரவுத்தள நிரல்.

go down : நின்று போதல்.

golfball printer : குழிப்பந்தாட்டப் பந்து அச்சடிப்பி : அச்செழுத்து முகப்பு எழுத்துகள் ஒரு கோளவடிவ ஊர்தியில் வார்த்தெடுக்கப்படுகிற ஒரு திண்ணிய எழுத்து முகப்பு அச்சடிப்பி.

good conductors : நல்ல கடத்திகள்.

good times virus : குட்டைம்ஸ் நச்சு நிரல் இணையத்தில் மின்னஞ்சல் மூலமாகவும், தொலைநகல் போன்ற ஏனைய தொலைத்தகவல் தொடர்பு மூலமாகவும் பரவும் ஒரு நச்சுநிரல். மடலின் பொருள் பகுதியில் Good Times என்று காணப்படும். இந்த மடலைத் திறந்து படிக்கும் பயனாளரின் கணினிக்குப் பாதிப்பு ஏற்படும். ஒரு மின்அஞ்சலைத் திறந்து படிப்பதனாலேயே ஒரு கணினியை நச்சு நிரல் தாக்கும் அபாயம் இல்லை என்ற போதிலும், ஒரு மின்னஞ்சலின் உடனிணைப்பாக (Attachment) அனுப்பப்படும் ஒரு கோப்பில் நச்சு நிரல் ஒட்டிக்கொண்டிருக்க முடியும். வேறெந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத நச்சுநிரல்கள் சில, நமக்குத் தெரியாமலே சங்கிலித் தொடராக அஞ்சல்களை அனுப்பச் செய்யும். தேவையின்றி இணைய அலைக்கற்றையையும், பயனாளரின் நேரத்தையும் வீணடிப்பது கூட நச்சுச்செயல்தானே! http : //www. cert. org என்னும் இணையதளத்தில் நச்சு நிரல்கள்பற்றி மேலும் விவரங்கள் அறியலாம்.

goodwill : நன்மதிப்பு.

gopher : கொறிப்பு அணுகுதல் : இணையத்தில் (Internet) பகிர்மானத் தரவுகளை அணுகுவதற்கான ஒரு வழிமுறை. இது"WEB"-க்கு முந்தியது.

Gopher server : கோஃபர் வழங்கன் : ஒரு கோஃபர் பயனாளருக்கு விவரப்பட்டிகளையும், கோப்புகளையும் வழங்குகின்ற ஒரு மென்பொருள்.

'Gopherspace : கோஃபர்வெளி : இணையத்தின் தொடக்க காலகட்டங்களில் கோஃபர்வெளி (Gopherspace) செல்வாக்குப் பெற்று விளங்கியது. இணையத்திலுள்ள தரவு களஞ்சியங்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து தலைப்பு வாரியாக அட்டவணையிட்டு வழங்கன் கணினிகளில் சேமித்து வைத்திருப்பர். இந்தக் கோஃபர் கணினியை அணுகும்