பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/656

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

goppa codes

655

goto statement


ஒருவர் தமக்கு வேண்டிய தரவு இருக்கும் இடமறிந்து தேடிப்பெறமுடியும். வையவிரிவலையின் (www) வருகைக்குப் பின் கோஃபர் வெளி செல்வாக்கு இழந்துவிட்டது.

goppa codes : கோப்பா குறியீடுகள் : நீள்வரை பிழைதிருத்தத் தொகுதிக் குறியீடுகளின் ஒரு குடும்பம்.

GoSIP : காஸிப் : அரசு திறந்தநிலை முறைமைகளின் பிணைப்புகளுக்கான குறிப்புரை என்று பொருள்படும் Government Open Systems interconnection Profile என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் (GOS1P). அமெரிக்க அரசு 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ல் ஓர் ஆணை பிறப்பித்தது. அரசுக்காக வாங்கப்படும் புதிய கணினிப் பிணையங்கள் ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ தரக்கட்டுப்பாடுள்ளவையாய் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட ஆணையையே காஸிப் குறிக்கிறது. ஆனால் இவ்வழி காட்டுநெறி, முழுமையாகப் பின்பற்றப்படவில்லை. எனவே போசிட் (POSIT) என்னும் புதிய நெறியை உருவாக்கியது.

GoTo-less programming : கோட்டூ இல்லாச் செயல்வரைவு : கோட்டூ (Goto) என்ற கட்டளைகளைப் பயன்படுத்தாமல் ஒரு செயல்முறையை எழுதுதல். இது, கட்டமைப்பு செய்த செயல்வரைவுகளில் ஒரு முக்கியமான விதி முறையாகும்.""கோட்டூ"கட்டளையானது, திரும்பி வரும் என்றஉத்தரவாதமில்லாமல், செயல்முறையில் பல்வேறு பகுதிகளைச் சுட்டிக் காட்டுகிறது.

go top : உச்சிக்குச் செல்க : பதிவேட்டுச் சுட்டுமுனையை ஒரு தரவுத்தளத்தின் முதல் ஏட்டுக்கு நகர்த்துகிற தரவுத்தள ஆணை.

go to page : செல்லும் பக்கம்.

go to statement : கோ டூ கூற்று' : 'அங்கு செல்' ஆணை : ஒரு நிரலிலுள்ள ஆணைகளை கணினி வரிசையாக நிறை வேற்றுகிறது. அவ்வாறின்றி நிரல் இயக்கத்தின்போது ஒரு கட்டத்தில் நிரலின் ஒரு குறிப்பிட்ட வரிக்குத் தாவ வேண்டுமெனில் இக்கட்டளையைப் பயன்படுத்த வேண்டும். நுண்செயலி மொழியில் கிளைபிரி (Branch), தாவல் (Jump) ஆணையாக இருந்தது. உயர்நிலை கணினி மொழிகளில் அங்கு செல் (GoTo) என்று மாறியது. பேசிக், பாஸ்கல், சி, சி++ போன்ற பல்வேறு மொழிகளில் இக்கட்டளை பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, இக்