பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/657

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gouraud shading

656

. gq


கட்டளையைப் பயன்படுத்த வேண்டாம் என்றே நிரலர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். காரணம், நிரலின் தருக்கமுறை ஓட்டத்தைப் புரிந்துகொள்ள நிரலருக்கும் கடினம்;மொழிமாற்றி (Compiler) யும் சிக்கலான வேலையைச் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

gouraud shading : 'கூராட்'நிழலடிப்பு : கணினி வரைகலையில், ஹென்றி கூராட் உருவாக்கிய ஓர் உத்தி. இது, பல கோண முகப்புகளில் வண்ணமும், ஒளிர்வும் கொண்ட ஒரு நிழலுரு மேற்பரப்பினை கணினியில் உருவாக்குகிறது.

. gov : கவ் : ஜிஓவி : அரசுத் துறையின் இணையதளங்களை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் பெருங்களப்பெயர். இணையக் களப்பெயர் முறைமையில் இடம்பெற்றுள்ள ஏழு முதன்மைக் களப்பெயர்களில் (com, org, net, . edu, . mil, int, . gov) ஒன்று அமெரிக்காவில் இராணுவம் அல்லாத கூட்டரசின் முகமைகள் இப்பெயரைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அமெரிக்காவின் மாநில அரசுகள் states. us என்னும் மேல்நிலைக் களப்பெயரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். us என்ற சொல்லுக்கு முன் அந்தந்த மாநிலத்தைக் குறிக்கும் ஈரெழுத்துச் சொல்லையும் சேர்த்துக் கொள்ளலாம்.

. gov. ca : . ஜிஓவி. சி. ஏ : ஓர் இணையதள முகவரி. கனடா நாட்டு அரசாங்கத்துக்குரியது என்பதைக் குறிக்கும் பெருங்களப்பெயர்.

GP : ஜி. பி : General-Purpose என்பதன் குறும்பெயர். Graphic Programming என்பதன் பெயராகவும் கொள்ளலாம்.

GPS : ஜிபிஎஸ் : General Problem Solver என்பதன் சுருக்கம். அறிவுத்துறையில் இருந்து தீர்வு காணும் முறைகளைப் பிரித்து பொதுப் பிரச்சினைகளைத் தீர்க்கும் முதல் நிரலாக்கத் தொடர். General Purpose Service என்பதன் குறும்பெயராகவும் கொள்ளலாம்.

GPSS : ஜிபிஎஸ்எஸ் : General Purpose System Simulation என்பதன் குறும்பெயர். கணினி அமைப்புகளை உருவாக்கப்பயன்படும் பிரச்சினை சார்ந்த மொழி.

. gq : ஜிகியூ : ஓர் இணையதள முகவரி பூமத்திய கினியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப்பிரிவுக் களப்பெயர்.