பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/658

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. gr

657

grade of service


. gr : ஜி. ஆர் : ஓர் இணையதள முகவரி கிரீஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப்பிரிவுக் களப்பெயர்.

grabber : பறிப்பி;சுரண்டி : ஈர்ப்பி : கவர்வி : சோதனைக் கருவி கம்பியின் இறுதியில் உள்ள இணைப்புப்பொருள் ஒருங்கிணைந்த மின்சுற்று இணைப்பு டிரான்சிஸ்டர் மற்றும் பிறவற்றின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ள அளவைக் கருவியுடன் இணைக்குமாறு வடிவமைக்கப்பட்ட ஸ்பிரிங் மூலம் இயக்கப்படும் கொக்கி மற்றும் இடுக்கியைக் கொண்டது.

grabber hand : சுரண்டும் கரம் : கை வடிவிலுள்ள சுட்டுமுனை. இது பொருள்களைச் 'சுரண்டி" ஒரு திரையில் மறு இடஅமைவு செய்வதற்கு ஒரு நுண்பொறி மூலம் நகர்த்தப்படுகிறது.

graceful degradation : கௌரவமான கீழிறக்கம் : படிப்படியாகச் செயல்திறன் இழத்தல் தோல்வி ஏற்படும்போது குரல்நிலை போன்ற குறைவான இயக்கம் மட்டும் தொடரும் வண்ணம் செய்யும்முறை.

graceful exit : நேர்த்தியான வெளியேற்றம் : கணினியின் ஒரு செயலாக்கத்தை பிழை நிகழும் வேளையில்கூட முறைப்படி முடித்து வைக்கும் வழிமுறை. செயலாக்கத்தின் இடையில் பிழையேற்படும் போது, கணினியின் கட்டுப்பாட்டை இயக்கமுறை எடுத்துக்கொள்ளும். அல்லது இச் செயலாக்கத்தைத் தொடக்கி வைத்த முந்தைய செயலாக்கம் எடுத்துக் கொண்டுவிடும். கணினி, செய்வதறியாது விக்கித்து நின்று விடும் நிலை தவிர்க்கப்படும்.

grade : தரம்;தரப்படி : குரல் தரம் போன்று குறிப்பிட்ட வழித்தடத்தில் அனுப்புவதற்காக கிடைக்கும் எல்லை அல்லது அகலம் அல்லது அலைவீச்சு பற்றியது.

grade of service : சேவைத் தரம் : பொதுத் தொலைபேசிக் கட்டமைப்பு போன்ற ஒரு தரவுத் தொடர்புப் பங்கீட்டுப் பிணையத்தில் பயனாளர் ஒருவருக்கு, அனைத்துத் தடங்களும் பயன்பாட்டில் உள்ளன;சிறிது நேரங் கழித்துத் தொடர்பு கொள்ளவும், என்ற செய்தி கிடைப்பதற்குரிய வாய்ப்புநிலை. ஒரு பிணையத்தின், தரவு போக்குவரத்தைக் கையாளும் திறனை மதிப்பிட, சேவைத்தர அளவீட்டுமுறை பயன்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலநேரத்துக்கு இத்


42