பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/661

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

graphical output

660

grsphic display mode


graphical output : வரைபட வெளியீடு.

graphical terminal : வரைகலை முனையம்; வரைகலைமுறை முகப்பு : ஓவியம் மற்றும் எழுத்துகள் வடிவ தரவுவைக் காட்டும் வண்ணம் திரை அமைக்கப்பட்டுள்ள (வீடியோ) காட்சித்திரை முகப்பு.

graphical user interface (GUI) : வரைகலை பயன்படுத்துவோர் இடைமுகப்பு : வாசகத்துடன் அல்லாமல் உருவங்களுடனும் ஒரு நுண்பொறியுடனும் பயனாளர் பணிபுரிவதற்கு உதவுகிற ஒரு வசதி. இதனால், விசைப் பலகையை மிகக்குறைந்த அளவில் பயன்படுத்த முடிகிறது. சிலசமயம் இது (Window, Icon, Mouse, Procedure) சூழல் என்றும் அழைக்கப்படுகிறது. இது, பயனாளருக்கு ஒரு பழக்கப்பட்ட திரைக்காட்சியையும், நிலையான செயற்பாட்டு நடைமுறையினையும் அளிக்கிறது.

graphiccard : வரைகலைஅட்டை : ' 'ஒளிப்பேழைக் காட்சிப் பேழை'என்பதும் இதுவும் ஒன்றே.

graphic character : வரைகலை எழுத்து : இலக்கங்கள், எழுத்துகள் உள்ளடங்கலாக அச்சிடத்தக்க குறியீடுகள்.

graphic controller : வரைகலை கட்டுப்படுத்தி :  : வரைகலைகளையும், வாசகங்களையும் உருவாக்கப் பயன்படுத்தப்படும் சாதனம். இதனை வரைகலை எந்திரம் என்றும் கூறுவர். ஒரு VGA அட்டை, வரைகலை எந்திரம் ஆகும். ஆனால், அது வரைகலைத் தகவமைவி அல்லது ஏற்பி என்று அழைக்கப்படுகிறது. MDA, CGA, EGA, VGA, MCGA, 8514|A ஆகியவை செந்திறமான IBM வரைகலை அட்டைகளாகும்.

graphic data structure : வரைகலை முறை தரவு அமைப்பு : வரைவியல் தரவுக் கட்டமைப்பு : வரைபடமுறை தரவுகளைக் குறிப்பிட இலக்கமுறை தரவுகளை தருக்கமுறையில் வரிசைப்படுத்தி வரைபடமுறை காட்சிக்காக அளித்தல்.

graphic digitizer : வரைகலை முறை இலக்கமாக்கி : கணினியில் பயன்படுத்துவதற்காக வரைபடமுறை மற்றும் ஓவியமுறை தரவுகளை இருமை உள்ளீடுகளாக மாற்றித் தரும் உள்ளீட்டுச் சாதனம்.

graphic display mode : வரைகலைக் காட்சி முறைமை வரைவியல் காட்சி முறைமை' : சிறப்பு வரைபடமுறை திரையில் வரைபட வடிவங்களை அச்சிட