பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/664

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

graphics input hardware

663

graphics printer


கிற கோப்பு. இது வாசகக்கோப்பு, ஈரிலக்கக்கோப்பு ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது.

graphics input hardware : வரைகலை முறை உள்ளீடு வன்பொருள் : வரைகலைமுறை தரவுவை கணினியில் கொடுக்கப்படும் வெளிப்புறச் சாதனங்கள், வரைவு இலக்கமாக்கி (Tablet), கட்டுக்கருவி மற்றும் ஒளிப்பேனா போன்றவற்றை இந்த வகையில் சேர்க்கலாம்.

graphics language : வரைகலை மொழி : ஓர் உயர்நிலை மொழியில் ஒரு வரைகலை உருக்காட்சியை ஒரு செயல்வரைவாளர் தெரிவிப்பதற்கு அனுமதிக்கிற கட்டளைகளின் தொகுதி. இந்த மொழி, மென்பொருள் அல்லது தனிவகை வன்பொருள் மூலம் வரைகலை உருக்காட்சிகளாக மாற்றப்படுகிறது.

graphics mode : வரைகலை முறை : வாசகங்களுடன் சேர்த்து உருக்காட்சிகளையும் பயன்பாடுகள் காட்சியாகக் காட்டுவதற்கு உதவுகிற முறை. பல கணிப்பயன்பாடுகள் எப்போதும் வரைகலை முறையில் இயங்குகின்றன. பலகணியில்லாப் பயன்பாடுகள் வரைகலை முறையில் அல்லது வாசக முறையில் இயங்க வல்லவை.

graphics output hardware : வரைகலை முறை வெளியீடு வன்பொருள்.'வரைகலை முறையில் கணினியில் காட்ட உதவும் வெளிப்புறப்பொருள்கள் வரைபடமுறை திரை, இலக்கமுறை வரைவி அல்லது வரைகலைமுறை அச்சுப்பொறி போன்றவற்றை இந்த வகையில் சேர்க்கலாம்.

graphics pen and tablet : வரைகலைப் பேனா மற்றும் பட்டயத்தகடு : அழுத்த உணர்வுடைய பட்டயத்தகட்டில் வைக்கப்படும் பொருளைப் படம் வரைவதற்கு அல்லது படியெடுப்பதற்கு உதவுகிற ஒரு சாதனம். இதனை இது இலக்கமாக்கி, கணினி தனது காட்சித் திரையில் காட்டுவதற்கு உதவுகிறது.

graphics port : வரைகலை வாயில் : 1. ஒரு வரைகலைச் செய்தி அறிவிப்பியை இணைப்பதற்காகக் கணினியிலுள்ள குதை குழி.

graphics printer : வரைகலை முறை அச்சுப்பொறி : சொற்கள், படங்கள், வரைபடமுறைகளை உருவாக்கக்கூடிய வெளியீட்டுச் சாதனம்.