பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/666

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

graph theory

665

gray code-to-binary


தொகுதியைக் குறிக்கும். இது, ஒருவர் வரைகலைப் பணிகளைச் செய்வதற்கு வசதி செய்து கொடுப்பதுடன், வரைகலைப் பயனாளருக்கான சூழலையும் உருவாக்கிக் கொடுக்கிறது.

graph theory : வரைகலைமுறை கொள்கை : இடவியலில் ஒரு பகுதியும், இணைப்பு ஆய்வில் ஒரு பகுதியுமாகச் சேர்ந்து உருவான கணிதத் துறையின் ஒரு பிரிவு. மின்சார கட்டமைப்புக் கொள்கை, இயக்கங்கள், ஆராய்ச்சி, புள்ளி விவரம், எந்திரவியல், சமூகவியல் மற்றும் நடத்தையியல் ஆய்வு ஆகிய துறைகளில் பயன்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

grass pay : மொத்த ஊதியம்.

great renaming : மிகப்பெரும் பெயர் மாற்றம் : இணையத்தில் இப்போது நடைமுறையில் இருக்கும் செய்திக்குழுக்களின் பெயரமைப்புக்கு மாறிய நிகழ்ச்சியைக் குறிக்கிறது. முன்பெல்லாம், இணையம் சார்ந்த புறச்செய்திக் குழுவின் பெயர்கள் net, என்றெல்லாம் இருந்தன. எடுத்துக்காட்டாக நிரல்களின் மூலவரைவுகளைக் கொண்டுள்ள செய்திக்குழு net. sources என்று பெயர் பெற்றிருந்தன. 1985ஆம் ஆண்டு மிகப்பெரும் பெயர்மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, net. sources என்ற பெயர் comp. sources. misc என்று மாற்றம் பெற்றது. இதுபோல, செய்திக்குழுவின் அனைத்துப் பெயர்களும் புதிய பெயரமைப்புக்கு மாற்றப்பட்டன.

gray scale monitor : சாம்பல் அளவீட்டுத் திரையகம்.

gray scale scanner : சாம்பல் அளவீட்டு வருடு பொறி.

grey code : சாம்பல் நிறக்குறியீடு : சாம்பல் நிறக்குறிமுறை : கிரே குறியீடு : அடுத்தடுத்த எண்கள் ஒரே ஒரு இலக்கத்தில் மட்டும் வேறுபடுவதான தன்மைகளைக் கொண்ட குறியீடு. ஒப்புமையிலிருந்து இலக்கமுறை மாற்றல் கருவியில் செயல்படச் சிறந்தது. உள்ளீடு/வெளியீடு நோக்கங்களுக்காகவும், குறியீட்டு மதிப்புகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. கணித கணக்கீடுகளைச் செய்வதற்கு முன்பு இருமை எண் வகைக்கு மாற்றப்பட வேண்டும். cycle code, reflected code என்றும் அழைக்கப்படுகிறது.

gray code-to-binary conversion : சாம்பல் நிறக்குறியீட்டிலிருந்து இருமைக்கு மாற்றல் : கிரே குறியீட்டு எண்ணில்