பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/667

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gray scale

666

gregorian calendar


இருமை (பைனரி) க்குச் சமமான மதிப்பு. இடது புறத்திலிருந்து வலதுபுறமாகப் படிக்க வேண்டும் என்ற விதியைக் கடைப்பிடித்து இந்த மாற்றம் செய்யப்படுகிறது. மிக முக்கிய இருமை இலக்கம் அதற்குச் சமமான கிரே குறியீட்டு இலக்கத்துடன் ஒப்பிடப்படுகிறது. கிரே குறியீட்டு இலக்கம் 1 என்றால் அடுத்த இருமை இலக்கம் மாறுகிறது. கிரே குறியீடு இலக்கம் பூஜ்யம் என்றால் அடுத்த இரும இலக்கம் மாறாது. சான்றாக, கிரே குறியீட்டு மதிப்பு 110100110 அதற்குச் சமமான இருமை எண் 100111011.

gray scale : சாம்பல்நிற அளவுகோல் : கணினி வரைபடமுறை அமைப்புகளில் ஒரே நிறக் காட்சி முறையில் வெளிச்சத்தின் மாறுபாடுகளின் அளவு. பல்வேறு வடிவமைப்புப் பொருள்களுக்கிடையில் உள்ள கருமை நிறத்தை அதிகரிக்க கிரே அளவுகோல் பயன்படுகிறது.

greater than : அதைவிடப் பெரிய : இரண்டு மதிப்புகளுக்கிடையில் உள்ள வேறுபாட்டின் உறவு. அதைவிடப் பெரிய எண் என்பது அதற்கான குறியீடு. 9 என்ற எண் 5 ஐ விடப் பெரியது என்றால் அம்புக்குறி சிறியதை நோக்கி இருக்கும். மாற்றுச் செயலாக்க முறையை ஒப்பிட இதைப் பொதுவாக பயன்படுத்துவார்கள்.

greek : விளங்கா மொழி : உண்மையான எழுத்துகள் விளங்கிக்கொள்ள முடியாத ஒருவகை வடிவத்தில் வாசகத்தைக் காட்சியாகக் காட்டுதல், எடுத்துக்காட்டு : மேசை மோட்டு வெளியீட்டில் முடிவுற்ற ஆவணத்தை முன்னதாகப் பார்க்கும்போது, செறிவினைக் கையாள்வதற்கு காட்சித்திரை போதிய அளவு பெரிதாக இல்லையெனில் அந்த வாசகம் விளங்கா மொழியில் உள்ளது எனப்படும்.

greeking : விளங்கா மொழியில் அமைத்தல் : வாசகங்களைப் போலி எழுத்துகளில் அல்லது பொருளற்ற குறியீடுகளில் உருப்படுத்திக் காட்டுதல்.

green book standard : பசுமை நூல் தரஅளவு : 1987 ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட CD-1முழுச் செயற்பணித் தனிக்குறிப்பீட்டுக்கான மாற்றுப் பெயர். இது, முதல் வரைவு வெளியிடப்பட்டுச் சரியாக ஓராண்டுக்குப் பிறகு வெளியிடப்பட்டது.

green pc : பசுமைக் கணினி.

gregorian calendar : கிரிகோரியன் நாட்காட்டி : மேலை நாடுகளில் முன்பு ஜூலியன் காலண்டர் பின்பற்றப்பட்டு