பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ground loop

669

grouping data


செய்யாத வண்ணம் அமைக்கும் செயல்முறை.

ground loop : தரை வளையம் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட முறைகளில் தரையில் பதிக்கப்பட்டுள்ள இரு சாதனங்களுக்கிடையில் முன்னும் பின்னுமாகப் பாய்கிற தேவையற்ற தரை மின்னோட்டம்.

ground mark : தொகுதிக் குறிமானம்.

ground noise injection : தரையோசை புகுத்தல் : ஒரு மின் விசை வழங்கீட்டுக் கருவி மூலம் தரை இணைப்புக்குள் தேவையற்ற ஓசையை வேண்டுமென்றே புகுத்துதல்.

group : குழு : 1. பல உறுப்புகள் இணைந்த ஒரு முழுமை. ஒரு தரவுத்தள அறிக்கையில் குறிப் பிட்ட ஏடுகளின் தொகுதி. 2. ஒரு படவரைவு மென்பொருளில் வரைகின்ற ஒரு படத்தில் பல்வேறு உருப்பொருள்களை ஒரு தொகுதியாகச் சேர்ப்பதையும் குழு என்பர். 3. பல் பயனாளர் இயக்க முறைமையில் சில குறிப்பிட்ட பயனாளர்களை இணைத்து ஒரு குழுவை உரு வாக்க முடியும். சலுகைகளையும் உரிமைகளையும் ஒரு குழுவுக்கென வரையறுக்க முடியும். அக்குழுவிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் அந்தச் சலுகைகளையும் உரிமைகளையும் பெறுவர்.

group and outline : குழுவும் சுற்றுக் கோடும்.

group band : குழுப் பட்டை.

group coding : குழுக்குறி முறையாக்கம்.

group decision support system (GDSS) : குழு முடிவு ஆதார முறைமை : மக்கள் குழுமங் களினால் முடிவெடுக்கப்படுவதற்கு உதவியாக இருக்கிற முடிவு ஆதாரப் பொறியமைவு.

group footer band : குழு முடிப்புப் பட்டை.

group header band : குழுத்தலைப்புப் பட்டை.

group icon : குழும உருவம் : ஒரு செயல்முறை மேலாண்மைக் கருவியில் குழுமப் பல கணி குறும அளவுக்குக் குறைக்கப்பட்டிருக்கும் போது, ஒரு குழுமத்தைக் குறிக்கிற உருவம். ஒரு குழுமத்தைத் திறப்பதற்கும், அதன் உள்ளடக் கத்தைப் பார்ப்பதற்கும் குழும உருவத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

grouping : குழுக்கள்.

grouping data : தரவுக் குழுக்கள்.