பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

H

672

hairline


H


H : எச் (பதினாறிலக்கம்) : ஒரு பதினாறிலக்க எண்ணைக் குறிக்கும் குறியீடு. எடுத்துக் காட்டு : 09 என்பது 9 என்பதன் எண்மான மதிப்பளவு.

H. 324 : ஹெச். 324 : பாட்ஸ் இணக்கி (POTS modem) வழியாக ஒளிக்காட்சித் தரவு மற்றும் குரல் ஆகியவற்றை ஒரே நேரத்தில் அனுப்புவதற்கான, பன்னாட்டுத் தொலைத் தொடர்புச் சங்கத்தின் தர வரையறைகள்.

hack1 : ஏனோதானோ; சிரத்தை யற்ற, அரைகுறை : 1. நேர்த்தியான தீர்வு காணப் பொறுமையின்றி கணினி நிரலிலுள்ள கட்டளைகளை அவசர கோலமாய் மாற்றியமைத்தல். 2. அரைகுறை வேலை.

hack2 : அரைகுறை : 1. படைப் பாக்கக் கூர்மதியுடன் ஒரு சிக்கலை அல்லது ஒரு திட்டப் பணியை அணுகுதல். 2. ஒர் இயக்க முறைமை அல்லது ஒரு பயன்பாட்டுத் தொகுப்பின் கட்டளையைத் திருத்தி, அதன் இயல்பான செயல்பாட்டை மாற்றியமைத்தல்.

hacker : ஹாக்கர்; ஆர்வலர்; குறும்பர் : 1. கணினியைப் பயன்படுத்துவதில் பட்டறிவு உள்ள, வேறுபாடான சிக்கல்களை கணினி மூலம் தீர்ப்பதில் ஆர்வம் உள்ள, கணினி ஆர்வலர். குறைந்த திட்டமிடலுடன் நிரலாக்கத் தொடர்களை உரு வாக்குபவர். கணினி ஜங்கி என்றும் அழைக்கப்படுபவர். ஆர்வலருக்கு கணினிகள் மற்றும் நிரலாக்கத் தொடர்களில் ஆர்வம் உண்டு. ஆனால் அறிவியல் கோட்பாடுகளில் கவனம் இருக்காது. 2. தீங்கு செய்ய வேண்டுமென்றோ அல்லாமலோ மற்றவரது கணினி அமைப்புகளில் வேண்டு மென்றே நுழைபவர்.

HAGO : ஹேகோ : நல்லதைப் பெறுக என்று பொருள்படும் Have A Good One என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். இணையத்தில் மின்னஞ்சலின் இறுதியிலோ, அரட்டையின் முடிவிலோ பயன்படுத்தப் படும் சொல்.

hairline : மயிரிழை : ஒர் அச்சிட்ட பக்கத்தில் அச்சிடப்படும் மிக மெல்லிய கோடு அல்லது திரையில் காட்டப்படும் குறைந்தபட்ச மெல்லிய கோடு. மயிரிழையின் அளவீடு, பயன்