பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/674

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

H KEY

673

half instruction



படுத்தப்படும் மென்பொருள், வன்பொருள் அல்லது தொழில் நுட்பத்தைச் சார்ந்தது. அமெரிக்க நாட்டின் அஞ்சல் துறை மயிரிழை என்பதை 0. 5 பாயின்ட் (ஏறத்தாழ 0. 007 அங்குலம்) என வரையறுத் துள்ளது. ஆனால் கிராஃபிக்ஸ் ஆர்ட்ஸ் டெக்னிக்கல் ஃபவுன்டேஷன் (GATF) மயிரிழை என்பது 0. 003 அங்குலம் என வரையறுத்துள்ளது.

H KEY : ஹெச் விசை : கையாள் விசை எனப் பொருள்படும் Handle Key என்பதன் சுருக்கச் சொல்.

HAL : ஹால் : ஆர்தர் கிளார்க்கின் "2001" என்ற நாவலில் வரும் கொல்லுதற்குரிய கணினியின் பெயர்.

half : பாதியளவு; அரை : ஒர் இடையீடு, பிழை அல்லது அறிவுறுத்தத்தினால் உண்டாக்கப்படும் ஒரு செயல்முறையின் நிறைவேற்றத்தில் ஒரு முடிவு.

half adder : அரைக்கூட்டி : இரண்டு இரும துண்மிகளைக் கூட்டும் திறனுள்ள கணினி மின்சுற்று.

half adder, binary : இரும அரைக் கூட்டி

half-duplex : பாதி இருவழி; அரை இருவழிப்பாதை : இரண்டு திசைகளில் தகவல் தொடர்பை அனுப்பும் திறனுள்ளது. ஆனால் ஒரு நேரத்தில் ஒரு திசையில் மட்டுமே செலுத்தும்.

half-duplex transmission : அரை இருதிசை அலைபரப்பு : ஒரு நேரத்தில் ஒரு திசையில் மட்டும் நடைபெறும் இருவழி மின்னணு உத்தரவு தொடர்பு.

half-height : பாதி உயரம் : ஒரு தாழ்ந்த உயர வட்டு இயக்கி. பழைய பாணி வட்டு இயக்கிகள் 8-10 செ. மீ. உயரம் உடையவை. பாதி உயர இயக்கிகள் 4-5 செ. மீ. உயரமானவை. முதல் தலைமுறை இயக்கிகளின் பாதியளவு செங்குத்து இடைவெளியை கொண்டவை. 5. 2" வட்டு இயக்கி. இது 1⅝" உயரமமும் 5. 75" அகலமும் உடையது

half-height drive : அரை உயர இயக்ககம் : இயக்ககங்களின் தலைமுறையைக் குறிக்கும் சொல். முந்தைய தலைமுறை சார்ந்த இயக்ககத்தின் உயரத்தில் பாதி உயரம் கொண்ட இயக்ககத்தைக் குறிக்கும் சொல் தொடர்.

half information : உதவித் தகவல்.

half instruction : பாதி கட்டளை; நிறுத்தும் ஆணை : ஒரு செயல்


43