பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/680

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hard disk measurements

679

hard hypen



hard disk measurements : நிலை வட்டு அளவைகள் : திறம்பாட்டளவு ஒரு வினாடிக்கு எத்தனை எட்டியல்கள் என்ற வீதத்திலும், மில்லி வினாடிகளிலும் அள விடப்படுகின்றன. இது "அணுகு நேரம்" (Access time) எனப்படும் அதிவேக சொந்தக்கணினி நிலை வட்டு அணுகு நேரங்கள் 12 முதல் 28 ms வரை வேறுபடும். மற்றக் கணினிகளில் வேகம் Ims.

hard disk store : நிலைவட்டுச் சேமிப்பு : தன் அலகுக்குள் முத்திரையிடப்பட்டுள்ள ஒரு வட்டு. இந்த வட்டினை அகற்ற முடியாதாகையால் எழுத்து/ படிப்புமுனை அதன் மேற்பரப்புக்கு மிக அருகில் இருக்கும்; தடங்களை அடர்த்தியாகச் செறிவாக்கம் செய்யலாம். துல்லியத் தொழில் நுட்பம் காரணமாக ஒரு படியெடுப்பு நெகிழ் வட்டினைவிட ஒரு நிலை வட்டு மிக அதிகத் திறம்பாடு கொண்டதாக இருக்கிறது. இது, நுண் சாதனங்களுக்கான 300 அல்லது அவற்றுக்கு மேற்பட்ட மெகா எட்டியல்களைக் கொண்டது. நெகிழ் வட்டுகளைப் போலவே, இதிலும் மென் பொருள் ஆணைகள்மூலம் செய்திக் குறிப்புகளையும், செயல் முறைகளையும் சேர்க்கலாம். நிலைவட்டுகளை"வின்செஸ்டர் வட்டு இயக்கிகள் (Windchester disk drives) என்றும் அழைப்பர்.

hard disk type : நிலை வட்டு வகை : ஒரு நிலைவட்டு எந்த வகையைச் சார்ந்தது என்பதைக் கணினிக்குத் தெரிவிக்கும் ஒரு எண் அல்லது சில எண்கள். நிலைவட்டிலுள்ள எழுத்து/ படிப்பு முனைகளின் எண்னிக்கை, உருளைகளின் (Cylinders) எண்ணிக்கை ஆகியவற்றை அவ்வெண்கள் குறிக்கின்றன. நிலைவட்டின் வகையைக் குறிக்கும் இவ்வெண்கள் வட்டின் மீதுள்ள பெயர்ச் சீட்டை எழுதப்பட்டிருக்கும். கணினியில் வட்டினை நிறுவும்போது அவ்வெண்களை கணினியில் உள்ளீடாகத் தரவேண்டும். சீமாஸ் அமைப்பு நிலை நிரலில் அவற்றைத் தர வேண்டியிருக்கும்.

hard error : வன் பிழை : கருவிப் பிழை : வன்பொருளில் ஏற்படும் கோளாறால் உண்டாகின்ற பிழை.

hard failure : கருவிப் பழுது; கருவிக் கோளாறு : கருவியின் ஒரு பகுதியில் ஏற்படும் கோளாறு. அதை மீண்டும் பயன்படுத்த வேண்டுமானால் பழுது பார்க்க வேண்டும்.

hard hyphen : எந்திரக்கோடு : வன் இணைகுறி, கட்டாய