பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hardware abstraction layer

681

hardware failure



hardware abstraction layer : வன் பொருள் கருத்தியல் அடுக்கு : விண்டோஸ் என்டி போன்ற உயர்நிலை இயக்க முறைமை களில், சில்லு மொழிக் (Assembly Language) கட்டளைகளை பிரித்துத் தரும் அடுக்கு. வன்பொருள் கருத்தியல் அடுக்கு, பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Application Programming Interface-API) போலவே செயல்படுகிறது. சாதனம் சாரா (device independent) பயன்பாடுகளை உருவாக்க நிரலர்கள் இவ் வடுக்கினைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

hardware cache : வன் பொருள் இடை மாற்றகம்.

hardware check : வன்பொருள் சரிபார்ப்பு : கணினியின் உள் செயல்பாட்டில் ஏற்படும் பிழை அல்லது சிக்கலைக் கண்டறிய கணினி வன்பொருள் தானா கவே மேற்கொள்ளும் சரிபார்ப்பு (பரிசோதனை) நடவடிக்கை.

hardware configuration : வன்பொருள் அமைப்பு; வன்சாதன உருவமைப்பு : கணினி அமைப்பை உருவாக்கும் பல் வேறு கருவிகளின் பகுதிகளை ஒழுங்குபடுத்துவதும் அவற்றுக் கிடையிலான உறவுகளும். இதில் கம்பிகளும், தரவுத் தொடர்புப் பாதைகளும் அடங்கும்.

hardware conflict : வன்பொருள் முரண்பாடு.

hardware-dependent : வன்பொருள் சார்பி; வன்பொருள் சார்ந்த : ஒரு குறிப்பிட்ட கணினி அமைப்பில் மட்டுமே செயல்படக்கூடிய நிரல்கள், மொழிகள், சாதனங்கள் மற்றும் பிற கணினி உறுப்புகள். எடுத்துக்காட்டாக, சில்லு மொழி (Assembly Language) ஒரு வன் பொருள் சார்பியாகும். பொறி மொழி (Machine Language), ஒரு குறிப்பிட்ட வகை நுண்செயலிக் கென உருவாக்கப்பட்டு அதில் மட்டுமே செயல்படக்கூடியதாகும்.

hardware description language : வன்பொருள் விவரிப்பு மொழி : இலக்கமுறை கணினி அமைப்புகளுக்கு ஆவணப்படுத்தல், வடி வமைப்புபோல அமைத்தல் மற்றும் உற்பத்தி செய்தலுக்கு உதவும் மொழி மற்றும் எண்களமைப்பு.

hardware dump, automatic : தானியங்கு வன்பொருள் திணிப்பு : தானியங்கு வன் பொருள் கொட்டல்.

hardware failure : வன்பொருள் செயல் நிறுத்தம் : மின்னணு வியல் சுற்றுவழிகளில் அல்லது