பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/685

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

harmonic distortion

684

hashing algorithm



harmonic distortion : ஒத்திசைவுத் திரிபாக்கம் : செய்தித் தொடர்புகளில், அனுப்பீட்டுக் கம்பிகளில் சீர்கேடு காரணமாக மூல அலைவெண்ணின் மடங்குகளாக உருவாக்கப்பட்ட அலை வெண்கள்.

harness : வடக்கம்பிக்கட்டு; வடக் கம்பித் தொகுதி : தனிக் கம்பிகளை ஒன்றாக இணைத்த தொகுதி.

Harvard architecture : ஹார்வார்டு கட்டுமானம் : நுண் செயலிக் கட்டுமானத்தில் ஒரு வகை. நினைவகத்திலிருந்து ஆணைகளைக் கொணரவும், தரவுவை எழுத/படிக்கவும் தனித்தனிப் பாட்டைகளைக் கொண்டிருக்கும். ஒரேநேரத்தில் நினைவகத்திலிருந்து ஆணையைக் கொணரவும், தரவுவை எழுத/படிக்கவும் முடியும் என்பதால், செயலியின் செய்திறன் வீதம் அதிகரிக்கிறது. இக்கட்டு மானமுறை நினைவக வடிவமைப்பை உச்சதிறன் உடைய தாக்கவும் வழி வகுக்கிறது. எப்படியெனில், ஆணைகள் எப்போதும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாய்க் கொணரப்படுகின்றன; ஆனால் தரவுவைப் படிப்பதோ எழுதுவதோ குறிப்பின்றி (Randomly) நடைபெறுகிறது.

Harvard Graphics : ஹார்வார்ட் வரைகலை : "சாஃப்ட்வேர் பப்ளிஷிங் கார்ப்பரேஷன்" என்ற அமைவனம் உருவாக்கியுள்ள சொந்தக் கணினி வணிக வரை கலை. இது முதலில் தயாரான வணிக வரைகலைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது, வாசக வரைபடங்களிலிருந்து விடு பட்ட பத்தியை உருவாக்கு கிறது.

HASCI : ஹஸ்கி : Human Applications Standard Computer interface என்பதன் குறும்பெயர். இது ஒரு விசைப்பலகை அமைப்பு முறையாகும்.

hash : ஹாஷ் : திரையில் காட்சி அசையாது நிற்றல்.

hashed random file organisation : கதம்பக் குறிப்பற்ற கோப்பு அமைப்பாக்கம் : தரவுகளைச் சேமிப்பதற்கான/மீட்பதற்கான ஒரு முறை.

hashing : அடையாள வழிகாட்டல்; துண்டாடல் : முகவரி மாற்றலுக்கான விசை. இதில் தரவுகளில் இருப்பிடத்தை விசையே முடிவு செய்யும்.

hashing algorithm : தற்சார்பு முகவரியாக்க படிநிலை முறை : 'k' என்ற ஒரு குறிப்பிட்ட விசைக்கு f (k). என்ற செயற்பணிகளைக் கொடுக்கிற ஒரு படி