பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

AMPS

68

amplitude modulation



AMPS : ஆம்ப்ஸ் : உயர்நிலை நடமாடும் தொலைபேசிச் சேவை என்று பொருள்படும், Advanced Mobile Phone Service என்ற சொல்தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். அலை வரிசைப் பகிர்வு ஒன்று சேர்ப்பு (Fraquency Division Multiplexing) துட்பத்தின், அடிப்படையில் செயல்படும் தொடக்க கால நடமாடும் தொலைபேசிச் சேவை களில் ஒன்று.


ampere : ஆம்பியர்; மின்னோட்ட அலகு : மின்சாரத்தின் அடிப்படை எஸ்ஐ அலகு.


amplifier : பெருக்கி : உள்ளிட்டு மின் குறிப்பின் மின்னழுத்தம். மின்னோட்டம், மின் ஆற்றலைப் பெருக்குவது.


amplifier, buffer : இடையகப் பெருக்கி


amplitude : வீச்சு; அலைவீச்சு : ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒலி, மின் அல்லது மின்காந்த சமிக்கையின் வலிமையை அளக்கப் பயன்படும் அளவீடு, படுகை அச்சிலிருந்து அலைவீச்சின் உயரத்தைக் கொண்டு இது மதிப்பிடப்படுகிறது.


amplitude modulation : அலை வீச்சுப் பண்பேற்றம் : மின்காந்த அலை மூலம் நமது பேச்சுத் தகவலை ஏந்திச் செல்லும்


: : குறியீட்டுச் சமிக்கை



: : அலைவீச்சுப பணபேறறம்