பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/690

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

help

689

hercules graphics



help : உதவி : பலமுறைகளில் உடனடியாக கிடைக்கக்கூடிய செயல். முறைமை அல்லது நிரல் தொகுப்பு எப்படிச் செயல் படுகிறது என்பதைப்பற்றிய கூடுதல் தரவுகளைப் பயனாள ருக்கு வழங்குகிறது. சூழ் நிலைக்கு ஏற்ற வகையில் உதவுகிற விசை என்பதைப் பார்க்கவும்.

help applet : உதவி குறுநிரல்.

hełp controller : உதவித் தொகுப்பி : வாசகங்களையும், தொகுப்பி கட்டளைகளையும் ஒரு நேரடி உதவிப் பொறியமைவாக மொழி பெயர்க்கிற மென் பொருள்.

helper application : உதவி பயன்பாடுகள்.

help menu : உதவிப்பட்டியல் : பயனாளருக்கு உதவக்கூடிய தரவுகளை திரையில் நேரடிக் காட்சியாகக் காட்டுதல். மென் பொருள் பற்றிய கேள்விகளுக்கு கட்டளைக் கையேடுகளின் துணையின்றி மென்பொருள் பயன்படுத்துவோர் பதிலளிப் பதற்கு இது உதவுகிறது. தனி யொரு விசையை (பெரும் பாலும் F1) அழுத்துவதன் மூலம் உதவிப் பட்டியல்கள் வர வழைக்கப்படுகின்றன.

henry : ஹென்றி (மின் தூண்டல் அலகு) : மின் வலிமையை அளப்பதற்கான அலகு. ஒரு ஹென்றி என்பது, ஒரு இணைப்பில் உள்ள மின்சாரத் தினால் ஒரு வோல்ட் மின் இயக்க சக்தியைப் பெறுகிற மின் இணைப்பின் மின் வலிமை ஆகும். அம்மின்சக்தி ஒரு வினாடிக்கு ஒரு ஆம்பியர் என்ற அளவில் மாறுபடுகிறது.

hercules adapter : ஹெர்குலஸ் தகவமைவு : ஒரு நிறப்படச் செய்தி அறிவிப்பியில் உயர்ந்த செறிவளவுகளில் வரைகலை களைக் காட்சியாகக் காட்டுகிற ஒரு மென்பொருள் பொறியமைவு.

hercules card : ஹெர்குலஸ் அட்டை உயர்செறிவளவு ஒளிப்பேழை (செய்தி அறி விப்பி) கட்டுப்படுத்தி அட்டை. இது பெரும்பாலும், உயர் செறி வளவு ஒரு நிறப்படக் காட்சி யில் பயன்படுத்தப்படுகிறது.

hercules graphics : ஹெர்குலஸ் வரைகலை ஹெர்குலஸ் கம்ப்யூட்டர் டெக்னாலஜி" என்ற அமைவனம் சொந்தக் கணினிகளுக்காகத் தயாரித்துள்ள ஒளிப் பேழைக் காட்சித் தர அளவு. இந்த அமைவனம், 720 x 348 படக்கூறுகள் கொண்ட செறி வளவுடன் நிறப்பட வரைகலை களையும், வாசகங்களையும் தயாரிக்கிறது.வார்ப்புரு:Lh