பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/693

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

HHOK

692

hidden lines



விலான எழுத்துருக்களை பெற முடியும்.

HHOK : ஹெச்ஹெச்ஓகே ஹா, ஹா. சும்மா விளையாட்டுக்கு என்று பொருள்படும் Ha, Ha Only Kidding என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின்னஞ்சல் மற்றும் நிகழ்நிலை (online) தகவல் தொடர்புகளில் நகைச்சுவையை அல்லது குறும்புத் தனத்தை வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் சொல்.

hide : மறை : ஒரு பயன்பாட்டு மென்பொருள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதன் இயக்கச் சாளரத்தை மறைத்து வைத்தல். இயக்க முறைமையின் ஒரு குறிப்பிட்ட கட்டளையைத் தந்தவுடன் மறைக்கப்பட்ட சாளரம் மீண்டும் தோற்றமளிக்கும்.

hide column : நெடுக்கை மறை.

hide document : ஆவணம் மறை

hidden character : மறைநிலை எழுத்து.

hidden codes : மறைநிலை குறியீடுகள் : நேரடித் திரை உரு வமைவுச் செயல்முறை மூலம் ஒர் ஆவணத்தில் இணைக்கப்பட்டுள்ள மறைநிலை வாசக உருவமைவுக் குறியீடுகள்.

hidden file மறைநிலைக் கோப்பு : ஒரு கோப்புப் பட்டியலில் பார்வைக்குக் காட்டப்படாத ஒரு கோப்பு. எடுத்துக் GTLG) MS-DOS; VAX DIR з), сраг МS-DOSG) se to SYS, DOS-SYS என்பவை மறைமுகக் கோப்புகள்.

hidden-line algorithm : மறைகோட்டு படிநிலை நடைமுறை : வரைபடம் வரைவதில், ஒரு முப்பரிமாணப் பரப்பு வரையப் படும்போது எந்தக் கோடுகள் கண்ணுக்குப் புலனாகக் கூடாது என்பதைத் தீர்மானிக்கப் பயன் படுத்தப்படும் ஒரு படிநிலை நடைமுறை.'

hidden line removal : மறை கோடு நீக்குதல் : திட முப்பரி மாணம் உடையதாக காட்சிக்கு வைக்கப்பட்ட ஒரு பொருளைக் காணும்பொழுது மறைக்கப் படக்கூடிய கோட்டுப் பகுதி களை படத்திலிருந்து நீக்குதல். கணினி வரைபட மென் பொருள்களும், வன்பொருள் களும் அத்தகைய மறைந்துள்ள கோடுகளை தானாகவே நீக்கக் கூடிய திறனைப் பெற்றுள்ளன.

hidden lines : மறைநிலை வரிகள் : ஒரு முப்பரிமாணப் பொருளை திரையில் காட்டும் போது, பொருளின் பொருண்மையினால் பார்வையாளர் பார்வையிலிருந்து மறைக்கப் பட்டிருக்கும் வரி. திரையில்