பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/695

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hierarchical database

694

hierarchical structure


மரத்தின் இலைகளுக்கும் மிலாறுகளுக்கும், கிளைகளுக்கும், பெரிய கிளைகளுக்கும், மரத்தின் துருக்குமிடையிலானதும், மற்றக் கிளைகளுக்கும் இலைகள், மிலாறுகளுக்கிடை யிலானதுமான தொடர்பினை ஒத்திருக்கும் தரவுத் தளம்.

hierarchical database management system (HDBMS) : தொடர் வரிசை தரவுத் தள நிர்வாக முறைமை : தலைகீழாகக் கவிழ்க்கப்பட்ட மரம் போல கிளைகளாகவும் இலைகளாகவும் தரவு இணைக்கப்பட்ட தரவுத் தளம் ஒன்றை, கணினியில் ஏற்றவும் அணுகவும் கட்டுப்படுத்தவும் உதவுகிற சம்பந்தப்பட்ட நிரலாக்கத் தொகுப்புகளின் குழுமம். Network Database Management System மற்றும் Relational Database Management System-களுக்கு மாறுபட்டது.

hierarchical data format : படிநிலைத் தரவு வடிவம்.

hierarchical file system : படிநிலைக் கோப்பு முறை : மேலிருந்து கீழான அமைவாக்கக் கட்டமைவில் தரவு கவைச் சேமித்து வைக்கும் கோப்பு. அமைப்பாக்க முறை. செய்திக் குறிப்புகளை அணுகுதல் உச்சியில் தொடங்கி படி நிலைகள் அனைத்து வழியாகவும் செல்கிறது. DOS, OS/2 ஆகியவற்றில் மூலத் தரவு தொடக்க நிலையாகும். மெக்கின்டோஷில் வட்டுப் பலகணி தொடக்க நிலையாகும்.

hierarchial menu : படிநிலைப் பட்டி : ஒன்று அல்லது மேற்பட்ட துணைப் பட்டிகளைக் கொண்ட ஒரு பட்டி. துணைப் பட்டி அதன்கீழ் துணைப் பட்டி களைக் கொண்டிருக்கலாம். இதுபோன்ற பட்டி/துணைப் பட்டி அமைப்புக்குப் படிநிலைப் பட்டி எனப் பெயர்.

hierarchical model : தொடர் வரிசை மாதிரி : தரவுத் தளம் மாதிரி இதில் ஒவ்வொரு பொருளும் ஒரு மர அமைப்பில் ஒரு குறிப்பிட்ட தொடர் முறையில் அமைந்திருக்கும்.

hierarchical network : தொடர் வரிசை இணையம் : கணினி இணையம். இதில் தரவு வகைப்படுத்துதல், கட்டுப்படுத்துதல் ஆகிய பணிகள் ஒவ்வொன்றுக்கும் என சிறப்பாக அமைக்கப்பட்ட கணினியால் நிறைவேற்றப் படுகின்றன.

hierarchical structure : தொடர் வரிசை வடிவமைப்பு : படிநிலைக் கட்டமைப்பு : தரவுத் தளம் ஒன்றின் நிர்வாக முறைமைகளில், மிகவும் எளிமையான