பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/697

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

high colour

696

highlighting



பிட்களில் ஒரு மதிப்பினைக் குறிக்கும் அமைப்புகளில், 8 முதல் 15 வரையிலான பிட்டுகளைக் கொண்ட பைட் மேல் பைட் எனப்படும். 0 முதல் 7 வரையுள்ள பைட் கீழ் பைட் ஆகும்.

high colour : உயர் வண்ணம் : 32, 768 வண்ணங்களை (15 துண்மிகள்) அல்லது 65, 536 வண்ணங்களை (16 துண்மிகள்) உருவாக்கும் திறன். அதிக எண்ணிக்கையிலான வண்ணங்களை உருவாக்கும் திறன்.

high density : மிகு அடர்த்தி; உயர் கொள்ளளவு : ஒர் "உயர் அடர்த்தி" நெகிழ்வட்டில், காந்தப் பூச்சின் அளவு (பரப்பு அடர்த்தி) ஒற்றை அல்லது இரட்டை அடர்த்திப் பூச்சினை விட அதிகமாக இருத்தல். இது, வட்டின் சேமிப்புத் திறனை அதிகரிக்கிறது. ஒற்றைப் பக்க 5. 25 வட்டு, 160 KB திறனுடையது; இரட்டைப் பக்க உயர் அடர்த்தி வட்டு (DSHD) 1. 2 MB அல்லது 1. 6 MB திறன் கொண்டது.

high end : உயர்நிலை; உயர் திறன் : செயல்திறனை மேம்படுத்தும் நவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் எந்த ஒன்றையும் இச்சொல்லால் குறிப்பிடுவர். உயர்திறன் தொழில் நுட்பம் எனில் அதிக விலை என்பது நிலவும் சூழ் நிலையாகும்.

higher level software : உயர்நிலை மென்பொருள்.

highlight : முனைப்பாக்கப் பகுதி : CRT இல் அமைப்பு, அடிக்கோடு, மறிநிலை ஒளிப்பேழை, செறிவாக்கம் போன்ற உத்திகள் மூலம் ஒர் உருக்காட்சியின் பகுதியை முனைப்பாகக் காட்டுதல்.

highlight bar : முனைப்பாக்கச் சட்டம் : ஒரு நேரடித் திரைப் பட்டியலில் மறி நிலை ஒளிப் பேழையில் அல்லது மாறுபட்ட வண்ணத்தில், தற்போதைய தேர்வு/சறுக்கச் சட்டநிலையைக் குறியீடாகக் காட்டுவதற்கான வரி.

highlight changes : மாற்றங்கள் முனைப்புறுத்துக.

highlighting : முனைப்பாகக் காட்டுதல் : நேரடித் திரைவாசகத் தேர்வு மற்ற வாசகங்களிலிருந்து வேறுபட்டிருக்கும் போது, விசையை நிரல்கள் அல்லது நுண்பொறி மூலமாக அதனை முனைப்பாகக் காட்டுதல். தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகம், ஏதாவதொரு வழியில் வேறு படுத்திக் காட்டப்படுகிறது. எடுத்துக்காட்டு : வாசகத்தின் வண்ணத்தை மாற்றிக் காட்டுதல்.