பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/698

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

high-level format

697

high order



high-level format : உயர்நிலை உருவமைவு; மேல்நிலை உருவமைவு : ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டு முறைக்குத் தேவைப்படும் தரவுகள் (பொருட் குறிப்பு அகராதிகள், அட்டவணைகள் முதலியன) ஒரு வட்டில் பதிவு செய்யப்பட்டிருத்தல்.

high-level language : உயர்நிலை மொழி; மேல்நிலை மொழி : இது ஒரு வகைச் செயல் முறைப்படுத்தும் மொழி. இது, மனித மொழியை அல்லது கணித குறிமானத்தைப் பெரிதும் ஒத்திருக்கிற பேரளவு அறிவுறுத்தங்களையும் கட்டளைகளையும், தீர்க்கப் படவேண்டிய சிக்கல்களை அல்லது பயன்படுத்த வேண்டிய நடைமுறையை விவரிப்பதற்குப் பயன்படுத்துகிறது. இதனைத் தொகுப்பி மொழி, எந்திரம் சாராத செயல்முறைப்படுத்தும் மொழி என்றும் கூறுவர். எடுத்துக்காட்டு : FORT- RAN; BASIC; COBOL, PASCAL; C. இது தாழ்நிலை மொழிகளைப்போல் எந்திரத்தின் கட்டமைவில் கவனம் செலுத்தாமல், தீர்க்கப்பட வேண்டிய சிக்கலின் தருக்க முறையில் கவனம் செலுத்த உதவுகிறது.

high-level network : உயர்நிலைப் பிணையம்.

high level programming language : உயர்நிலை நிரலாக்க மொழி.

high memory : உயர்நிலை நினைவகம் : 1. நினைவகத்தில் மிக உயர்ந்த திறனளவு. 2. சொந்தக் கணினிகளில், 640 K-க்கும் 1 M அல்லது 64k-க்குமிடையிலான பரப்பளவு. 1024-க்கும் 1088 K-க்கும் இடையிலான HMA பரப்பளவு.

high memory area : மேல் நிலைவகப் பரப்பு : ஐபிஎம் பீசி மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் ஒரு மெகாபைட் எல்லைக்கு அடுத்துள்ள 64 கிலோ பைட்டு பரப்பைக் குறிக்கிறது. டாஸ் 5. 0 மற்றும் பிந்தைய பதிப்புகளில் HIMEM. SYS என்னும் நிரல், டாஸ் இயக்க முறைமையின் சில தரவுகளை மேல் நினைவகப் பரப்பில் மாற்றிக் கொள்ளும். இதன் காரணமாய் பயன்பாட்டுத் தொகுப்புகளுக்குக் கிடைக்கும் மரபு நினைவகப் பரப்பின் அளவு அதிகரிக்கும். சுருக்கச் சொல். ஹெச்எம்ஏ (HMA).

high order : உயர்மதிப்பு நிலை : எண் ஒன்றின் கூடுதல் மதிப்பு அல்லது முக்கியத்துவமுடைய இலக்கம் அல்லது இலக்கங்கள் தொடர்பானது. 7643215 என்ற எண்ணில் உயர் ஒழுங்கில் இருப்பது 7 அடி நிலை ஒழுங்கு என்பதற்கு மாறானது. Most Significant Digit என்பதைப் பார்க்க.