பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

anachromic

69

analog input system



பொருட்டு, இயல்பான தகவலை மாற்றியமைக்கின்ற ஒரு செயல் முறை. இம்முறையில், தகவல் அலையை, நிலையான அலை வெண் கொண்ட ஒரு மின்காந்த கமப்பி அலையின் மீது செலுத்தி, அத்தகவல் அலையின் அலை வீச்சுக்கு ஏற்ப, சுமப்பி அலையின் அலைவீச்சு மாற்றி யமைக்கப்பட்டு மறுமுனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.


anachromic : காலத்திற்குப் பொருந்தாத


analog : தொடர்முறை ஒத்திசை முறை ஒத்திசைவிலான : தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கும் ஒத்திசைவுகளால் குறிப்பது. இலக்கமுறைக்கு மாறானது.


analog channel : தொடர்முறை தடம்; ஒத்திசை வழித் தடம் : மாறும் மின்சமிக்கைகளை தொடர்ச்சியாக அனுப்ப அல்லது பெற பயன்படும் ஒரு தகவல் தொடர்புத் தடம்.


analog circuit : தொடர்முறை மின்சுற்று ஒத்திசை மின் சுற்று : வெளியீடானது தொடர்ச்சியான உள்ளீட்டின் பணியாக உள்ள மின்சுற்று. இலக்கமுறை மின்சுற்றின் தனித்தனி மதிப்புகளுக்கு மாறான நிலை.


analog computer : தொடர்முறைக் கணினி : ஒத்திசைக் கணினி : மாறும் வெப்பநிலை அழுத்தம் போன்ற தொடர்ந்து மாறும் நிலைகளை அளந்து பருநிலை அளவுகளாகக் காட்டும் கணினி. இலக்கமுறை கணினி மற்றும் கலப்பினக் கணினி முறைமைக்கு மாறானது.


analog data : தொடர்முறைத் தரவு; ஒத்திசைத் தரவு : இம் முறையில் தரவுக்கும் அளவுகளுக்கும் இடையில் உள்ள உறவு துல்லியமாக உணர்த்தப்படுகிறது. தொலைபேசி வழியாகச் செல்லும் மின் சமிக்கைகள் தொடர்முறைத் தரவாகும். இவை ஒலிகளுக்கான துல்லியமான உருவகிப்பாகும். இலக்கமுறை தரவுகளுக்கு இது மாறானது.


analog device : தொடர்முறை காரணிப்படுத்தல்; ஒத்திசைக் கருவி; தொடர்முறைச் சாதனம்.


analog display : ஒத்திசைக் காட்சி; தொடர்முறை சமிக்கை வடிவிலான திரைக் காட்சி : நிறம், நிழல் இவற்றின் அளவுகள் துண்டு துண்டான மதிப்புகளாக இல்லாமல் தொடர் மதிப்புகளாய் அமைந்த ஒளிக் காட்சி முறை.


analogical reasoning : ஒத்திசை அறிதல்; ஒப்புமை அறிதல்.


analog input system : ஒத்திசை உள்ளிட்டு முறைமை; தொடர் முறை உள்ளிட்டு முறைமை.