பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/700

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

high sierra

699

high storage



முறைகளை அளிக்கின்றன. வரைகலைத் திரை, 'x' கிடை மட்ட அச்சு, 'y' செங்குத்து அச்சு என்று பகுக்கப்பட்டிருக்கும். பரப்பளவு முழுவதும் படக்கூறுகளால் அமைந்திருக்கும். ஏறத்தாழ 640 x 180 படக்கூறுகள் உயர் செறிவு என்றும் 320 x 240 படக்கூறுகள் தாழ்செறிவு என்றும் கருதப்படுகின்றன. அச்சடிப்பிக்கு அல்லது வரை விக்கு படக்கூறு தரவுகளை அனுப்புவதற்கும், திரையில் படிப்பதற்கும் தனிவகை வரை கலைச் செறிவுகள் தேவை.

high sierra : உயர் சியாரா : (p3out வது CD-ROM தர அளவு. டாஹல் ஏரியின் அருகிலுள்ள ஒரு பரப்புக்காக 1985-இல் இது வகுக்கப்பட்டது. அந்தப் பகுதியின் பெயரே இதற்குச் சூட்டப்பட்டது. பின்னர், இது ISO 9660 தர அளவாக உருவாக்கப்பட்டது.

high sierra group : உயர் சியாரா குழுமம் : CD-ROMஇல் தரவு சேமிப்பதற்கான தர அளவு. இது, அமெரிக்காவில் நெவடாவில் டாஹ ஏரி அருகிலுள்ள உயர் சியரா உணவகத்தில் 1985 -இல் நடைபெற்ற தொழில் துறைச் சார்பாளர்களின் கூட்டத்தில் வகுக்கப்பட்டது. இப்போது, இது CD-ROMஇன் ஒரு பகுதியாகும்.

High Sierra Specification : உயர் நிலை சியாரா வரன்முறை : ஒரு குறுவட்டில் பதியப்படும் தருக்கக்கட்டமைப்பு, கோப்புக் கட்டமைப்பு மற்றும் ஏட்டுக் கட்டமைப்பு ஆகியவற்றின் தொழில்முறை வடிவாக்க வரையறைகள். 1985 நவம்பரில் டாஹோ ஏரிக்கு அருகிலுள்ள சியாரா என்னுமிடத்தில் நடை பெற்ற குறுவட்டு தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது. ஐஎஸ்ஓ 9660 பன்னாட்டுத் தரக்கட்டுப் பாட்டுக்கான அடிப்படையாக விளங்கியது.

high speed networks : உயர்வேக கணினி இணையங்கள் : வினாடிக்கு இரண்டு கோடி துண்மிகளுக்கு (MBps) மேற்பட்ட வேகத்தில் அனுப்பீடு செய்யக்கூடிய வளாகக் கணினி இணையங்கள் (LAN).

high speed printer : மிகைவேக அச்சிடு கருவி; அதிவேக அச்சுப் பொறி : ஒரு நிமிடத்தில் 300 முதல் 3, 000 வரிகள் அச்சிடக் Line printer arası பதைப் பார்க்கவும்.

high storage : உயர்சேமிப்புத் திறன் : கணினி ஒன்றின் நினைவக மேல் முகவரி வரிசை.