பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/701

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

high tech

700

HIS



பெரும்பாலான எந்திரங்களில் அதில் இயக்க முறைமை அமைந்திருக்கும்.

high tech : உயர்தொழில் நுட்பம் : கணினிகளிலும், மின்னணு வியலிலும், சமூக-அரசியல் சூழல்களிலும் மிக அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும், நவீன எந்திரங்களினால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும் குறிக்கும் சொல்.

hightech city : மாநுட்ப நகரம்; பெரும் தொழில்நுட்ப நகரம் : இந்தியாவில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகருக்கு அருகில் புறநகராக உருவாகியுள்ள ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது. ஏராளமான கணினி நிறுவனங்கள் அங்குள்ளன.

high volatillity : உயர் மாறுதிறன் ; வேக அழிவு : கோப்பு ஒன்றில் குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படும் உயர்வேக மாறுதல்கள்.

high voltage : உயர்மின்னழுத்தம்; அதிக மின்னழுத்தம்.

highway : பெருவழி; நெடுந் தடம் : ஒரு கணினியமைவில், நினைவகம், பிற புறநிலச் சாதனங்கள் ஆகியவற்றுக்கும், அவற்றிலிருந்தும் உட்பாட்டு/ வெளிப்பாட்டு மாற்றங்களைக்கையாள்வதற்கான குறியீடுகளைக் கொண்ட வழி.

hints : நினைவுக் குறிப்புகள் : அச்செழுத்து வடிவளவின், குறிப்பாகச் சிறிய முகப்பு அளவுகளின் அடிப்படையில் இடைவெளியையும் மற்ற முகப்பு அம்சங்களையும் மாற்றும்படி உருவமைப்புச் சாதனத்திற்கு அறிவுறுத்துகிற பின் குறிப்பு எழுத்து முகப்புகளுக் கான தனிவகைக் கூடுதல் சேர்மானங்கள்.

HIPO : Hierarchy Plus input-Output Process என்பதன் குறும்பெயர்.

HIPP ; ஹிப்பி : உயர் செயல்திறன் இணைநிலை இடைமுகம் என்று பொருள்படும் High Performance Parallel Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மீத்திறன் (super) கணினிகளில் பயன்படுத்தக்கூடிய அன்சி தகவல் தொடர்பு தர வரையறை.

hi-res graphics : : High resolution graphics என்பதன் குறும்பெயர். நெருடலற்ற உண்மையானது போன்று வெளியீட்டுத் திரையில் தோன்றும் படம். ஏராளமான பட உருவாக்கக் கூறுகளால் உருவாக்கப்படுகிறது. Low-res graphics என்பதற்குமாறானது.

HIS : : Hospital Information System என்பதற்கான குறும்பெயர்.