பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/702

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

histogram

701

. հո



மருத்துவமனைத் தகவல் முறைமைக்கான ஆங்கிலக் குறும்பெயர்.

histogram : பட்டை வரைபடம் : செங்குத்தான குறுக்குப் பட்டியல் புள்ளி விவரத் தகவல்களை வரைபடமாக வழங்க அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. செங்குத்துக் களங்களுக்கான அகலம், இடைவெளி அளவு கூட்டெண்னிக்கை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.

history : வரலாறு : கணினியில் ஒரு மென்பொருளில் பயனாளர் மேற்கொள்ளும் தொடர்ச்சியான பணிகளின் பட்டியல். (எ-டு) 1. இயக்க முறைமையில் உள்ளீடு செய்யும் கட்டளைகளின் தொகுப்பு. 2. கோஃபர் கணினிகளில் ஒன்றன்பின் ஒன்றாய்க் கடந்துவரும் பட்டித் தேர்வுகள் (menu options). 3. இணைய உலாவியில் அடுத்தடுத்து தொடர்ந்து வந்த தொடுப்புகள். (links).

history list : வரலாற்றுப் பட்டியல்.

history settings : வரலாற்று அமைப்புகள்.

hit : கிடைத்தல் : இரண்டு வகையான தரவுகளை வெற்றிகரமாக ஒப்பிடல்; இணைகளை ஒப்பிடல்.

hi-tech : உயர்-தொழில்நுட்பம் : உயர் தொழில் நுட்பம் என்பதன் சுருக்கப் பெயர். அண்மைக் காலத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் எல்லா வகை வன்பொருள்களையும் இது குறிக்கிறது.

hit rate : மறைவிட நினைவக விழுக்காடு : இது மறைவிட நினைவக மேலாண்மை தொடர்புடையது. மையச் செயலகத்துக்கு (CPU) தேவைப்படும் மறைவிட நினைவக விழுக்காட்டினை இது குறிக்கிறது. பெரும்பாலான மறைவிடக் கட்டுப்பாட்டாளர்கள் 90% வீதத்தை விரும்புவார்கள்.

hit ratio : வெற்றி விகிதம் : முதன்மை நினைவகத்தில் தரவுகள் எத்தனை முறை வெற்றிகரமாக இட அமைவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதற்கும், ஒரு குறிப்பிட்ட கால அளவின் போது மேற்கொண்ட முயற்சிகளின் மொத்த எண்ணிக்கைக்கு மிடையிலான விகிதம்.

. hk : . ஹெச்கே : ஒர் இணைய தள முகவரி ஹாங்காங்கைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

. hn : . ஹெச்என் : ஒர் இணைய தளம் ஹொண்டுராஸ் நாட்டைச்