பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/706

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

home computer

705

home row



home computer : குறுங்கணினி : ஆட்டங்களை விளையாட இல்லங்களில் பயன்படுத்தப்படுகிறது. வீட்டுப் பயன்பாட்டுச் சாதனங்களைக் கையாளவும், மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்களைச் செய்யவும் வணிகக் கணக்குகளைப் போடவும் மேலும் பலவகையான பணிகளைச் செய்யவும் பயன்படுகிறது.

home-grown software : தாமே ஆக்கிய மென்பொருள் : கணினி முறைமை ஒன்றைப் பயன் படுத்துவோரால் எழுதப்பட்ட நிரலாக்கத்தொகுப்பு.

home key : ஆரம்பச் சாவி : உணர்த்து குறியீட்டைத் தனது இல்ல நிலைத் திரையின் இடது மேல்மூலைக்குக் கொண்டு வருவதற்கான விசைப்பலகை இயக்கம்.

homeostasis : சமநிலை : ஒரு பொறியமைவில் உட்பாட்டு வெளிப்பாட்டுத் தேவைகள் சரி நிகராக இருக்கும்போது ஏற்படும் சமநிலை.

home management software : இல்ல மேலாண் மென்பொருள் : வீட்டைப் பராமரிக்கவும், திட்ட மிட்ட வகையில் கண்காணிக்கவும் தயாரிக்கப்பட்ட நிரலாக்கத் தொகுப்பு. எடுத்துக்காட்டாக சரிபார்த்தல், உணவுக் கோப்பு, இருப்புச் சரிபார்த்தல், கணக்கிடு நிரலாக்கத் தொகுப்பு ஆகியவற்றைக் கொண்டது.

home office : இல்ல அலுவலகம்; வீட்டு அலுவலகம் : 1. வீட்டிலேயே அமைத்துக் கொள்ளும் அலுவலகம். 2. ஒரு நிறுவனத்தின் தலைமை அலுவலகம். 3. ஓர் அலுவலகத்துக்குத் தேவையான அனைத்து வகை வசதிகளும் உள்ளடங்கிய கணினியைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுகிறது.

home page : முகப்புப் பக்கம் : 1. வைய விரி வலையில் (World Wide Web) ஒரு மீவுரை (hypertext) முறைமையில் தொடக்கப் பக்கமாக அமைக்கப்படும் ஒர் ஆவணம். 2. மைக்ரோ சாஃப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தொடக்கப் பக்கம் இவ்வாறு அழைக்கப்படுகிறது. 3. ஒரு வலைத்தளத்தில் நுழையும் போது காட்சியளிக்கும் முதல் பக்கம்.

home record : இல்ல ஆவணம் : நிறுவனம் ஒன்றின் இணைப்பு முறையில் உள்ள ஆவணத் தொடரில் முதல் ஆவணம்.

home row : இல்ல வரிசை : விசைகளை இயக்குவதற்கு இடையில் பயனாளர் தங்கள்

45