பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/708

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

horizontal feed

707

horizontal scan rate



தொகுப்பை உருவாக்கியவர். பின்னர் கணினி மொழியில் பேரும் புகழும் பெற்றார். முதல் நடைமுறையில் பயன்படும் compiler நிரலாக்கத் தொகுப்பை உருவாக்கினார். Cobol-ஐ உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.

horizontal feed : கிடைமட்ட ஊட்டு.

horizontal frequency : கிடைமட்ட அலைவரிசை.

horizontal market software : கிடைமட்டச் சந்தை மென் பொருள் : அனைத்து வகையான தொழில், வணிக நடைவடிக்கைகளுக்கும் பயன்படுத்தக் கூடிய சொல்செயலி (Word Processor) போன்ற பயன்பாட்டு நிரல்கள். வேறுசில மென்பொருள்கள் குறிப்பிட்ட தொழில் துறைக்கு மட்டுமே பயன்படும்படி தயாரிக்கப்படுகின்றன.

horizontal motion index : கிடைமட்ட இயக்கக் குறி; கிடைமட்ட இயக்கக் குறி அட்டவணை : ஒரு கிடைமட்டத் திசையில் ஒர் அச்சுச் சுருள் முனை முன்னே நகர்த்தக்கூடிய பெருமத் தொலைவு. இது அச்சடிப்பான் சுழற்சியின் அளவீடாகும். பெயர்ச் சுருக்கம் : HMI.

horizontal resolution : கிடைமட்டத் தெளிவு : ஒரு கிடைமட்டக் கோட்டின் மீதுள்ள கூறுகளின், அல்லது புள்ளிக் குறிகளின் (ஒரு அச்சு வார்ப்புருவிலுள்ள நிரைகளின்) எண்ணிக்கை. இது, செங்குத்துத் தெளிவிலிருந்து மாறுபட்டது.

horizontal retrace : கிடைமட்ட பின் வாங்கல் : பரவல் வருடு ஒளிக்காட்சி திரைக்காட்சியில் ஒரு வருடுவரியின் வலது ஒரத்திலிருந்து அடுத்த வரியின் இடப்புற ஒரம்வரை (வரியின் தொடக்கம்வரை) மின்னணு ஒளிக்கற்றை நகர்வது.

horizontal scan frequency : கிடை நுண்ணாய்வு அலை வெண் : ஒளிப்பேழைத் திரையில் ஒரு வினாடி நேரத்தில் ஒளிர்வூட்டப்படும் வரிகளின் எண்ணிக்கை. எடுத்துக்காட்டு : வினாடிக்கு 60 மடங்கு வலுவூட்டப்பட்ட 400 வரிகளின் தெளிவுக்கு 24KHz நுண்ணாய்வு விகிதம் தேவைப்படுகிறது. இது, தொலைக்காட்சியில் கிடைமட்ட ஒருங்கிசைவு அலைவெண் போன்றது. இது செங்குத்து நுண்ணாய்வு அலை வெண்ணிலிருந்து மாறுபட்டது.

horizontal scan rate : கிடைமட்ட வருடி வேகம்.