பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/709

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

horizontal scrolling

708

host mode



horizontal scrolling : இட, வல நகர்த்தல்; கிடைமட்ட நகர்த்தல் : திரையில் ஒரு நேரத்தில் கொள்ளும் தகவல்களைவிட கூடுதலான தகவல்களைப் பயனாளர் காணும் வகையில் கிடைநிலை தகவல் அல்லது உரையை நகர்த்துதல்.

horizontal synchronization : கிடைமட்ட ஒத்திசைவு : பரவல் திரைக்காட்சி (Raster display) முறையில் மின்னணுக் கற்றை இடப்புறமிருந்து வலப்புறம், மறுபடி வலப்புறமிருந்து இடப்புறம் நகர்ந்து வரிவரியாக ஒர் உருத்தோற்றத்தை உருவாக்குவதில் பின்பற்றப்படும் நேரக் கட்டுப்பாடு. கோணம் நிலைத்த மடக்கி (phase locked loop) எனப்படும் மின்சுற்று கிடைமட்ட ஒத்திசைவு சமிக்கையைக் கட்டுப்படுத்துகிறது.

host : ஒம்புநர்; புரவலர் : ஒர் இணையத்திலுள்ள ஒரு நுழைவாயில் கணினி. ஒரு விருந்தில் விருந்தளிப்பவரையும் குறிக்கிறது.

host adapter : ஒம்பு தகவமைப்பி : எந்த வடிவளவையும் கொண்ட ஒரு கணினியுடன் ஒரு புறநிலை அலகினை இணைக்கிற சாதனம். இதில் ஒரு கட்டுப்படுத்தியைவிடக் குறைவான மின்னணுவியல் அடங்கியுள்ளது. எடுத்துக் காட்டு : IDE வட்டு, உள்ளமைந்த கட்டுப்படுத்தியைக் கொண்டிருக்கிறது. இது, ஒரு IDE அல்லாத ஆயத்தத் தாய்ப் பலகையுடன் ஒரு IDE ஒப்பு தகவமைப்பியின் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது.

host based : ஒம்புநர் அடிப்படை : ஒரு பெரிய, மையக் கணினி யமைவு மூலம் கட்டுப்படுத்தப் படுகிற செய்தித் தொடர்புப் பொறியமைவு.

host computer : புரவலர் கணினி ; ஒம்பு கணினி : 1. தொலைவில் முனையங்களுக்கும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கருவிகளுக்கும் கணினித் திறனை வழங்குகிற மைய வகைப்படுத்தும் அலகு. 2. தொலைத் தகவல் தொடர்புக்கு அல்லது வளாக இணைய இணைப்புக்குப் பொறுப்பான கணினி. 3. கணினி இணையம் ஒன்றில் மையக் கட்டுப்பாட்டுக் கணினி.

host language : புரவலர் மொழி; ஒம்பு மொழி : மற்றொரு மொழி பொதிந்துள்ள அல்லது உள்ளடங்கிய நிரலாக்கத் தொகுப்பு மொழி.

host mode : ஒம்பு முறை : மனிதர் உதவியின்றி வருகிற தொலைபேசி அழைப்புக்குப்