பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/710

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

host name

709

hot docking



பதிலளிக்கவும், தகவல்களைப் பெறவும் ஒரு கணினியை அனுமதிக்கிற செய்தித் தொடர்பு முறை.

host name : புரவன் பெயர்; புரவலர் பெயர்; ஒம்புநர் பெயர் : இணையத்திற்குள் இயங்கும் ஒரு குறிப்பிட்ட பிணையத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட வழங்கன் கணினியின் (Server) பெயர். ஒர் இணைய தள முகவரியிலுள்ள சொற்களில் இடக்கோடியில் உள்ள பெயர் பெரும் பாலும் அத்தளத்துக்குரிய புரவன் கணினிப் பெயராய் இருக்கும். (எ-டு) chn. vsnl. net. in என்ற முகவரியில் chn என்பது, விஎஸ்என்எல் நிறுவனத்துப் புரவன் கணினிப் பெயர்.

host timed out : புரவன் நேரக் கடப்பு : ஒரு டீசிபி/ஐபி (TCP/IP) பிணைய இணைப்பில் தரவு பரிமாற்றம் நடைபெறும்போது, ஒரு குறிப்பிட்ட நேர எல்லைக்குள் (சில நிமிடங்கள்) தொலை நிலைப் புரவன் கணினி பதிலிறுக்கத் தவறுகையில் ஏற்படும் பிழைநிலை. இந்நிலை பல்வேறு காரணங்களினால் ஏற்படலாம். புரவன் கணினி செயலிழந்து போவதால் அல்லது பிணையத்திலிருந்து துண்டிக்கப்பட்டிருப்பதால் ஏற்படலாம். ஆனால் பயனாளருக்குக் கிடைக்கும் பிழை சுட்டும் செய்தி, பிழைநிலைக் காரணத்தைத் துல்லியமாகச் சொல்லும் என்று எதிர்பார்க்க முடியாது.

host unreachable : புரவன் எட்டா நிலை : ஒரு டீசிபி/ஐபீ (TCP/IP) பிணைய இணைப்பில் பயனாளர் அணுக விரும்பும் குறிப்பிட்ட புரவன் கணினியுடன் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ள முடியாதபோது நிகழும் பிழைநிலை. பிணையத் திலிருந்து துணிக்கப்பட்டதாலோ, செயலிழப்பின் காரண மாகவோ இந்நிலை ஏற்படலாம். பிழை சுட்டும் செய்தி, காரணத்தை துல்லியமாகத் தெரிவிக்கலாம், தெரிவிக்காமலும் போகலாம்.

hot : சூடான : தனிச்சிறப்பான, அவசர ஆர்வமூட்டும், மிகவும் புகழ்பெற்ற.

hot docking : சூடான இணைப்பு; நடமாடும் இணைப்பு : பயணம் செய்துகொண்டிருக்கும்போதே ஒரு மடிக்கணினியை வேறொரு தலைமைக் கணினியுடன் பிணையமுறையில் இணைத்துக் கொள்ளல். அவ்வாறு இணைத்துக் கொண்டு தலைமைக் கணினியில் ஒளிக்காட்சி, திரைக் காட்சி மற்றும் ஏனைய பணிகளையும் இயக்குதல்.