பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/715

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

HTTP status codes

714

hub ring



எம்எல் ஆவணங்களையும் தொடர்புடைய கோப்புகளையும் ஹெச்டிடிபீ நெறிமுறையைப் பயன்படுத்தி அனுப்பிவைக்கும் வழங்கன் மென்பொருள். கேட்கப்பட்ட ஆவணம் அல்லது கோப்பு வழங்கப்பட்டவுடன் கிளையனுக்கும் வழங்கனுக்கும் இடையே உள்ள தொடர்பு முறிந்துவிடும். வைய வலை மற்றும் இணைய தளங்களில் ஹெச்டீடீபீ வழங்கன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

HTTP status codes : ஹெச்டீடீபீ நிலைமைக் குறியெண்கள் : தரவு பெறுவதற்கான கோரிக்கையின் விடைகுறித்து ஹெச்டீடீபீ வழங்கன் (server) அனுப்பிவைக்கும் மூன்றிலக்கக் குறியெண். குறியெண் 1இல் தொடங்கினால், கிளையன் கணினி தான் அனுப்பும் விவரங்களை இன்னும் அனுப்பி முடிக்கவில்லை என்றும், 2-எனில் வெற்றிகரமான விடை என்றும், 3 எனில் கிளையன் இனி, மேல்நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்றும், 4 எனில் கிளையன் பிழை காரணமாய் விடைபெறும் முயற்சி தோற்றது என்றும், 5 எனில் வழங்கன் பிழை காரணமாய்த் தோற்றது என்றும் பொருள்.

. hu : . ஹெச்யூ : ஒர் இணைய தளம் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

hub : குவியன் இணைப்பு மையம் : ஒர் நட்சத்தி அமைவிடத்தில் செய்தித் தொடர்பு இணைப்புகளுக்கான மைய விசையமைப்புச் சாதனம். இது, அனுப்பீட்டுக்கு உதவி புரியவோ, செய்திப் பரிமாற்ற நடவடிக்கைக்கு வலுவூட்டும் குறியீடுகளை மறு உருவாக்கம் செய்யவோ செய்யாது. இந்த குவியன்கள், ஒரு மின் இணைப்புத்தொகுதி அமைவிடங்களுடன் சேர்க்கப்படலாம். எடுத்துக் காட்டு : இடர்ப்பாடுகளை அகற்றும் திறனை அதிகரிப்பதற்காக ஒர் ஈதர்னெட் கணினி இணைப்பை ஒர் ஸ்டார் அமைப்பாக மாற்றவல்லது.

hub, remote access : சேய்மை குவியம்; தொலை அணுகு குவியம்.

hub ring : குவிய வளையம்; அச்சு மைய வளையம் : 5. 25" நெகிழ்வட்டின் துளையினுள் விறைப்புத் தன்மைக்காக அழுத்தி வைக்கப்படும் தட்டையான வளையம். இயக்கியின் பற்று வளையம், அச்சு மைய