பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/716

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

հսb

715

human oriented language



வளையத்தைக் கதிர்மீது அழுத்துகிறது.

hue : வண்ணச் சாயல்; நிறம் : கணினி வரைகலையில், ஒரு குறிப்பிட்ட வண்ணத்தின் ஒரு குறிப்பிட்ட வண்ணச் சாயல்.

Huffmann coding : ஹஃப்மன் குறியீட்டு முறை : இடப்பரப்பு வடிவங்களில் செயற்படுகிற உருக்காட்சி அடர்த்திச் செய்முறை. இது JPEG படிநிலை நெறிமுறையின் ஒரு பகுதி. புள்ளியியல் அடர்த்தியாக்கமுறை. இது மாறுகிற நீளத் துண்மிச் சரங்களாக எழுத்துகளை மாற்றுகிறது. அடிக்கடி வரும் எழுத்துகள், மிகக் குறுகிய துண்மிச் சரங்களாக மாற்றப்படுகின்றன. மிக அருகில் வரும் எழுத்துகள், மிக நீளமான சரங்களாக மாற்றப்படும். அடர்த்திச் செய்முறை இருவழிகளில் செயற்படுகிறது. முதல் வழியில் தரவு தொகுதிப் பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. இது, அதன் உள்ளடக்கங்களின் அடிப்படையில் ஒரு மர உருமாதிரியை உருவாக்குகிறது. இரண்டாவது வழியில், இந்த உருமாதிரி வழியாக தரவுகள் அடர்த்தியாக்கம் செய்யப்படுகின்றன.

Huffman tree : ஹஃப்மன் மரம்; ஹஃப்மன் மரவுரு : குறைந்த பட்ச மதிப்பீடுகளைக் கொண்ட மரம். Minimal tree and optimal merge tree என்பதைப் பார்க்கவும்.

human biocomputer : மனித உயிரியல் கணினி : ஒரு கணினி போல் செயற்படும் மனித மூளை. இதில் மூளையின் முக்கிய பகுதி, ஒரு பகுத்தறிவு அல்லது உள்ளுணர்வு அறிவாற்றலின் பல்வேறு கூறுகளுக்கு ஆதரவாகத் தனிப்பண்பாக்கம் செய்யப்படுகிறது.

human/engineering : மாந்தப் பொறியியல் : மனிதர்கள் எளிதாகவும் வசதியாகவும் கையாளத் தக்கவகையில் பொருள்களை வடிவமைத்தல் தொடர்பான ஆய்வு. ergonomics என்றும் கூறுவர்.

human / machine interface : மாந்த/எந்திர இணைமுக எல்லை ; மனிதன்/பொறி இடை முகம் : எந்திரங்களுடன் மனிதர்கள் இணைந்து செயல்படும் எல்லை.

human mind model : மனித அறிவு மாதிரியம்.

human oriented language : மனிதர் சார்ந்த மொழி : ஒரு கணினிச் செயல் முறைப்படுத்தும் மொழி. இது, அன்றாடம் பேசப்படும் மொழியில் உள்ளது போன்ற சொற்களை உடையது. எடுத்துக்காட்டு : Basic, Cobol.