பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/717

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

humanware

716

hydra



humanware : மனிதப் பொருள்

hung : தொங்கல் : கணினி செயற்படுவது திடீரென நின்று விடுவதைக் குறிக்கப் பயன்படும் சொல்.

hybrid circuit : கலப்பு மின்சுற்று : அடிப்படையிலேயே முற்றிலும் வேறுபாடான உறுப்புகளைப் பயன்படுத்தி ஒரே மாதிரியான பணியைச் செய்தல். வெற்றிடக் குழாய்கள் (Vacuum tubes) மற்றும் மின்மப் பெருக்கிகளை (Transisters) பயன்படுத்தி உருவாக்கப்படும் தொகுப்பிசை பெருக்கிகளை (Stereo amplifier) எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

hybrid computer : கலப்பினக் கணினி : இலக்கமுறை (Digital) மற்றும் தொடர்முறை (analog) மின்சுற்றுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கணினி.

hybrid computer system : கலப்பின கணினி முறைமை : அலை நிலை மற்றும் எண்ணியல் கருவிகளைப் பயன்படுத்தும் முறைமை.

hybrid microcircuit : கலப்பு நுண் மின்சுற்று வழி : பல்வேறு ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகளையும் தனிவேறு அமைப்பிகளையும் ஒரு மண்பலகை மீது ஏற்றி அமைக்கப்பட்டுள்ள மின்னணுவியல் மின்சுற்று வழி. இது, இராணுவ மற்றும் செய்தித் தொடர்புப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

hybrid network : கலப்பு இணையம் : செய்தித் தொடர்புகளில், பல்வேறு விற்பனையாளர்களிடமிருந்து வாங்கப்பட்ட சாதனங்களினாலான ஒர் இணையம்.

hybrids : கலப்பின வகை : பல்வேறு தொழில் நுணுக்க வல்லுநர்களின் சிறு இணைப்புகளை இணைத்து ஒரே தளத்தில் உருவாக்கப்பட்ட இணைப்புகள். ஓரின ஒருங்கிணைப்பு என்பதற்கு மாறானது.

hydra (Hybrid Document Reproduction Apparatus) : ஹைட்ரா (கலப்பு ஆவணப் படிப் பெருக்கக் கருவி) : ஒரே எந்திரத்தில் அமைந்துள்ள ஒர் அச்சடிப்பி, ஒளிப்படப் படியெடுப்பி, நுண்ணாய்வுக் கருவி, தொலைநகல் ஆகியவற்றின் தொகுதி. இது ஒத்தியல்பான குறியீடுகளை ISDN, BRI குறியீடுகளாக மாற்றுகிறது. "ஆஸ்டின் மாக் டெவலப்மென்ட் அசோசி யேஷன்" தயாரித்துள்ள இந்தச் சாதனம், மெக்கின்டோஷ் வரை கலை அட்டைப் பணித்திறனைச் சோதனை செய்கிறது.

hyper - access : மிகை அனுகுதல் : ஹில்கிரேவ்" என்ற அமை