பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/718

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hyper - access

717

hypercube topology



வனம் தயாரித்துள்ள சொந்தக் கணினி (PC) செய்தித்தொடர்புச் செயல்முறை. இது தரவு செறிவாக்கத்தை அளிக்கிறது. தனக்கென ஒரு வரிவடிவ மொழியை உடையது. இது, ஏராளமான முனையங்களுக்கும், தரவு தொடர்பு நெறிமுறைகளுக்கும் உதவுகிறது.

hyperCard : மிகை திறன் அட்டை : "ஆப்பிள்" (Apple) என்ற கணினி அமைவனம் தயாரித்துள்ள பயன்பாட்டு மேம்பாட்டுப் பொறியமைவு. இது, மெக்கின்டோஷ் மற்றும் ஆப்பிள் 11 GSஇல் செயல்படுகிறது. மிக முற்போக்கான ஒருங்கிணைந்த கூறுகளின் ஒரு தொகுதியை அளிக்கிறது. ஒரு தரவு தளப் பொறியமைவு என்ற முறையில், தரவுகளையும், வாசகங்களையும், வரைகலைகளையும் இருத்திவைத்துக் கொள்ளக்கூடிய அட்டை அடுக்குகளின் வடிவில் கோப்புகளை உருவாக்க இது பயனாளருக்கு உதவுகிறது. ஒரு கட்டுப்பாட்டுப் பொறியமைவு என்ற முறையில், பயன்பாடுகளைத் தொடங்குவதற்கான முதன்மைப் பட்டியலாக இது பயன்படுகிறது. CD ROM, ஒளிப் பேழை வட்டு போன்ற பன்முகச் செய்தித் தொடர்புச் சாதனங்களை இது கட்டும் படுத்துகிறது. கல்விப் பயன் பாடுகள் உருவாக்கத்துக்கு உதவுகிறது.

hypercube : மிகை கனசதுரம் : ஈரிலக்கப் பன்முகக் கணினிகளினாலான (4, 8, 16 முதலியன) ஒருபோகு செய்முறைப்படுத்தும் கட்டமைவு. இதில் தரவுகள் மிகக் குறைந்த அளவு பயணஞ் செய்கிற வகையில் கணினிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டு : இரு 8-மையமுனைக் கனசதுரங்களில், கன சதுரத்திலுள்ள ஒவ்வொரு மைய முனையையும் மற்றொன்றிலுள்ள அதற்கு நேரிணையான மைய முனையுடன் இணைக்கலாம்.

hypercube topology : மிகை கன சதுர அமைவிடம் : பன்முக நுண்செயலிகளைப் பயன்படுத்தும் பேரளவு ஒருபோகு செய்முறைப்படுத்தும் மீமிகைக் கணினிகளுக்காக அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள கட்டமைவு.

hyperline : மிகைஇணைப்பு; மீத்தொடுப்பு.

hyperlink : மீத்தொடுப்பு : ஒரு மீவுரை ஆவணத்திலுள்ள ஒரு சொல், ஒரு சொல் தொடர். ஒரு குறியீடு அல்லது ஒரு படிமம் ஒர் உறுப்புக்கும், அதே