பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/720

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hypertape

719

hyphenation programme



hypertape : மீதுயர் நாடா : மின் காந்த அலகு. நாடாப் பொதிந்த குடுவையாகப் பயன்படுத்தப் படுகிறது. நாடாச் சுருளாகப் பயன்படுத்தப்படுவதில்லை. நாடாப்பொறி குடுவையில் நாடாச்சுருளும் ஏற்பு நாடாச்சுருளும் உள்ளன.

hyper terminal : ஹைப்பர் டெர்மினல் - ஒரு மென்பொருள்.

hypertext : மிகையுரை; மீவுரைப் பரிமாற்ற நெறிமுறை; பிணைப்பு உரை : சொல் பகுப்பி பொறியமைவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். மிகை உரை பற்றிய தரவு. எடுத்துக்காட்டு : ஒரு சொற்றொடரிலுள்ள ஒரு சொல்லைத் தேர்ந்தெடுப்பதன்மூலம், அந்தச் சொல் தொடர்பான தரவு வேறு கோப்பில் இருக்குமானால் அது மீட்கப்படுகிறது; அல்லது அந்தச் சொல்லின் அடுத்த நிகழ்வு கண்டறியப்படுகிறது. மனிதச் சிந்தனைக்குக் கணினி பதிலளிக்கும்படி செய்கிற ஒரு முறையாக இந்தக் கோட் பாட்டினை டெட் நெல்சன் உருவாக்கினார்.

hyper text markup language (HTML) : மீவுரைக் குறியிடு மொழி.

hyper text transfer protocol (HTTP) : மீவுரைப் பரிமாற்ற நெறிமுறை.

hyperware : மிகைச் சாதனம் : மிகை உரைத் தரவுத் தொடர்புச் சாதனங்கள்.

hyphenation : இணைப்புக் குறியிடல் : வலது ஒர விளிம்பைத் தாண்டி நீண்டுசெல்லும் சொற்களைப் பிளவு செய்து இணைப்புக் குறியிடுதல். சொற்களை ஒரு இணைப்புக் குறியீட்டு அகராதி அடிப்படையில் இணைத்து வைப்பதன் மூலம் அல்லது உள்ளமைந்த விதித் தொகுதிகள் அல்லது இரண்டின் மூலமாக மென்சாதனம் சொற்களுக்கு இணைப்புக் குறியிடுகிறது.

hyphenation dictionary : இணைப்புக் குறியீட்டு அகராதி : முன்னரே வரையறுத்த சொல்லிடை இணைப்புக் குறி அமைவிடங்களுடன்கூடிய சொற் கோப்பு.

hyphenation programme : சொல் ஒட்டு நிரல்; சொல்வெட்டு நிரல் : பெரும்பாலும் சொல்செயலிப் பயன்பாடுகளில் சேர்க்கப்படும் ஒரு நிரல். ஒவ்வொரு வரி முடிவிலும் இடம் போதாத