பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/723

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IBIS

722

IBM PC


யிலான தகவல் பரிமாற்றம், வளரும் நாடுகளில் தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிப்பது ஆகியவை முக்கிய நோக்கமாகும்.

IBIS : இபிஸ் : இந்தியாவின் இந்தியன் ஆர்கானிக் கார்ப்பரேஷன் மூலம் சோனட்டா Integrated Business Management Information System என்பதன் சுருக்கம். விற்பனை, வாங்குதல், இருப்புக் கணக்கெடுப்பு மற்றும் நிதிக் கணக்கு (பெற வேண்டியது, தர வேண்டியது) உள்ளிட்ட அனைத்து வணிகப் பணிகளையும் கணினி மயமாக்குவதற்கு உருவாக்கப்பட்டது.

IBM : Information Business Machine என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். முன்னணி கணினி நிறுவனம்.

IBM 360 series : ஐபிஎம் 360 வரிசை : மூன்றாம் தலைமுறை கணினிகளில் முன்னோடியாக விளங்கிய ஐபிஎம் 7, 000 வரிசைகளுக்கு மாற்றாக 1964இல் ஐபிஎம் நிறுவனம் 360 வரிசை ஒருங்கிணைந்த மின்சுற்று அமைப்பை அறிவித்தது.

IBM AT : ஐபிஎம் ஏட்டீ : 1984 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சொந்தக் கணினிகளில் ஒரு வகை. ஐபிஎம் நிறுவனத்தின் பீசி/ஏட்டீ (AT-Advance Technology) வரையறுப்புகளுக்கு ஒத்தியல்பானது. முதல் ஏட்டீ கணினி இன்டெல் 80286 நுண் செயலியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னோடியாயிருந்த எக்ஸ்ட்டீ (XT) கணினியை வேகத்தில் விஞ்சியது.

IBM corporation : ஐபிஎம் நிறுவனம் : உலகின் மிகப் பெரிய தரவு சீரமைப்புக் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனம்.

IBM mini computers : ஐபிஎம் சிறு கணினிகள் : ஐபிஎம் நிறுவனத்திடமிருந்து வந்த நடு வரிசை கணினிகள். 1969இல் அறிமுகப்படுத்தப்பட்ட சிஸ்டம் 3 முதல் இந்த வரிசை துவங்கியது.

'IBM PC : ஐபிஎம் பீசி : ஐபிஎம் சொந்தக் கணினி எனப் பொருள்படும் IBM Personal Computer  என்பதன் சுருக்கம். 1981 இல் அறிமுகப்படுத்தப் பட்டசொந்தக் கணினிகளுள்  ஒருவகை. ஐபிஎம் மின் பீசீ வரை

யறுப்புக்களுக்கு ஒத்தியல்பானது. முதல் பீசி, இன்டெல் 8088 நுண்செயலியை அடிப்டையாகக் கொண்டது. கணினி உலகில் பல ஆண்டுகளாக ஐபிஎம் பீசிகள் தாம், உண்மையில் பீசி மற்றும் நகலி