பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/725

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

icon

724

ideas


என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ 3-வது அடுக்கான பிணைய அடுக்கில், பிழைதிருத்தம் மற்றும் ஐபீ (IP. Internet Protocol) பொதி செயலாக்கத்திற்குத் தேவையான பிற தகவல்களையும் தரக்கூடிய இணைய நெறிமுறை. எடுத்துக்காட்டாக, அடைய முடியாத இலக்கு பற்றிய தகவலை ஒரு கணினியிலுள்ள ஐபி மென்பொருள் இன்னொரு கணினிக்குத் தெரிவிக்க உதவுகிறது.

icon : சின்னம், சிறு படம் : ஒரு வெளியீடு ஒன்றில் ஒரு செய்தியை, ஒரு பொருளை, ஒரு கோப்பை, ஒரு கருத்தைக் குறிப் பிடும் ஒரு வரைபடம். ஒரு செயலைக் குறிப்பிட உதவும் கோட்டு வரைபடம். நிரல் தொகுப்பு ஆவணம் அல்லது செயல்பாடுகளில் ஒன்றைத் தேர்வுசெய்ய உதவும் வரைபடம்.

iconic interface : குறும்பட இடைமுகம்.

icon parade : அடையாள அணிவகுப்பு;சின்ன அணிவகுப்பு : ஒரு மெக்கின்டோஷ் கணினி இயக்கப்படும்போது திரையில் வரிசையாகத் தோற்றமளிக்கின்ற சின்னங்கள்.

ICOT : ஐசிஓடீ : Institute for New Generation Computer Technology என்பதற்கான குறும்பெயர். ஜப்பானின் ஐந்தாவது தலைமுறை ஆய்வை நடத்தும் நிறுவனம்.

ICPEM : ஐசிபிஇஎம் : Independent Computer Peripheral Equipment Manufacturers என்பதற்கான குறும்பெயர்.

. id : . ஐடி : ஒர் இணைய தளம் இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

IDE : ஐடிஇ : ஒருங்கிணைந்த சாதன மின்னணுவியல் எனப்பொருள்படும் Integrated Device Electronics என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஒருவகை வட்டக இடைமுகம். இதன் கட்டுப்படுத்தி மின்னணுச் சுற்றுகள் வட்டிலேயே பொருத்தப்பட்டிருக்கும். தனியான தகவி அட்டைகள் தேவையில்லை. பீசி/ஏட்டீ கணினிகளில் ஐபிஎம் பயன்படுத்திய கட்டுப் படுத்திகளுடன் ஒத்தியல்பானது. அதேவேளையில் முன்னோக்கிய இடைமாற்று நினைவகம் (Lookahead Caching) கொண்டது.

ideas : ஐடியாஸ் : சிஎம்சி இந்தியா நிறுவனம் உருவாக்கிய ஒரு இந்திய செய்தி பொதிந்திருக்கும் அமைப்பு. உலகத் தரத்திற்கு தொகுக்கும்