பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/729

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

if-then-else

728

IIL


மொழிகளில் IF-உடன் ELSE-என்னும் துணைப் பிரிவும் பயன்படுத்தப்படு கிறது. அப்பூலியன் தொடர் பொய் (அல்லது தவறு) என்ற நிலையில் நிறை வேற்றப்பட வேண்டிய கட்டளைத் தொகுதி ELSE பகுதியில் குறிப்பிடப்படு கிறது. (எ-டு) if (n>10) {a+=100, b=1"c+200;} else {a-=100; b=a/c-200;}

if-then-else : எனில்-இன்றேல் : வடிவமைக்கப்பட்ட நிரல் தொகுப்பு தயாரிப்பின் அடிப்படையான மூன்று கட்டளை அமைப்புகளில் ஒன்று. நிபந்தனை சரிபார்ப்பு அல்லது தீர்வு செய் கட்டளை என இது அழைக்கப் படும்.

ignore : புறக்கணி : தவிர்.

ignore all : அனைத்துப் புறக்கணி;அனைத்தும் தவிர்.

Ignore character : புறக்கணிப்பு உரு.

IGP : ஐஜிபீ உள்ளக நுழைவி நெறிமுறை என்று பொருள்படும் Interior Gateway Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். திசைப்படுத்தும் தகவலை அனுப்புவதை ஒழுங்குபடுத்தும் நெறிமுறை.

IGRP : ஐஜிஆர்பீ : உள்ளக நுழைவி திசைவிக்கும் (வழிப் படுத்தும்) நெறிமுறை எனப்பொருள்படும் Interior Gateway Routing Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சிஸ்கோ நிறுவனம் இதனை உருவாக்கியது. ஒன்றுக்கு மேற்பட்ட நுழைவிகளை திசைவித்தலில் (வழிப்படுத்தலில்) ஒர் இணக்கத்தை ஏற்படுத்த இந் நெறிமுறை உதவு கிறது. மிகப் பெரிய பிணையங்களில் நிலைத்த வழிப்படுத்தல், பிணையக் கட்டமைவுகளின் மாற்றங்களுக்கு ஏற்ப விரைவான தகவமைவு மற்றும் குறைந்த செலவு இவையே ஐஜிஆர்பீ-யின் குறிக்கோள்கள்.

IIL : ஐஐஎல் : Integrated Injection Logic என்பதற்கான குறும்பெயர். வருங்கால குறும் செயலிகள் மற்றும் அரைக் கடத்தி நினைவகங்களில் பயன் படுத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு வளரும் தொழில்

நுணுக்கம். இச்சிப்புகள் ஏற்கனவே மின்னணுவியல் கைக்கடிகாரங்களில் பயன்