பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/732

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Image enhancement

731

Image setter


திருத்தி, செழுமைப்படுத்த முடியும். புதிய படிமங்களை, படங்களை இதில் உருவாக்க முடியாது. அதற்கென தனியான மென்பொருள் தொகுப்புகள் உள்ளன.

image enhancement : உருப்பட மேம்பாடு : வரைபடம் ஒன்றின் எல்லாப் பாகங்களையும அல்லது ஒரு பாகத்தை வண்ணமிடல், அல்லது நிழல்படியச் செய்தல், முக்கியத்துவம் அளித்தல், பெரிதுபடுத்துதல், தலைகீழாகப் படமாகக் காட்டல் அல்லது மினுக்கிடச் செய்தல்.

image map : படிமக் குறிபடம் : ஒரு வலைப்பக்கதிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட மீத்தொடுப்புகளை கொண்டிருக்கும் ஒரு படிமம். ஒரு படிமத்தின் மீது வேறுவேறு பகுதிகளில் பயனாளர் சுட்டியால் சொடுக்கும் போது அதே வலைப்பக்கத்தின் வேறு பகுதிக்கோ, வேறொரு வலைப்பக்கத்துக்கோ, வேறொரு கோப்புக்கோ இட்டுச் செல்லப்படுவார். படிமக் குறிபடம் பெறும்பாலும்ர் ஓர் ஒளிப்படமாகவோ, ஓர் ஓவியமாகவோ, பல்வேறு வரைபடங்களின்/ஒளிப்படங்களின் கூட்டாகவோ இருக்கலாம். ஒரு குரிப்பிட்ட வலைதலத்தின் பல்வேறு வளங்களைச் சுட்டும் குறியீடுகளாக இப்படங்கள் அமைகின்றன. படிமக் குறிபடங்கள் சிஜிஐ (CGl) நிரல் மொழியின் மூலம் உருவாக்கப்படுகின்றன. சொடுக்குறு குறிபடம் என்றும் இவை அழைக்கப்படுகின்றன.

Image-oriented backup : உருவம் சார்ந்த பின்பலம் : கோப்புகள் தொடர்பின்றி வட்டில் கண்ணாடி உருவத்தை உருவாக்கும் எந்த ஒரு பின்பல அமைப்பும் இத்தகைய அமைப்புடன், பின்பல ஊடகத்தின் கோப்புகள் அணுக அனுமதித்து வட்டு முழுவதும் சுழல வேண்டும்.

image processing : உருப்பட செயலாக்கம்;பட அலசல்;உருவ அலசல் : ஒரு கணினி வரைகலை உதவி தொழில் நுட்பம். பூமியைச் சுற்றும் செயற்கைக் கோள்கள் அனுப்புகின்ற தகவல்களை உருவங்களாக மாற்றி செயலாக்கம். புரிய வழி வகுக்கின்றன. தொழில்நுட்ப முறையில் நிறங்கள், நிழல்கள் அவற்றின் உறவுகளை ஆராய்வது. வானிலை நிலப்படங்களை உருவாக்கல், தடய (போரன் சிக்) அறிவியல் போன்ற துறைகளில் பயன் படுத்தப்படுகிறது.

Imagesetter : உருப்பட அமைப்பு : சொற்களையும், வரைகலைகளையும் கையாளும் எழுத்தமைப்பு எந்திரம்.