பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/734

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

immediate access

733

impact print



மெய்ம்மை அடிப்படையிலான கூற்றாக இருக்க வேண்டிய தில்லை.

Immediate access : உடனடி அணுக்கம்; உடனடி ஏற்பு : தாமதமின்றி தரவுகளை உள்ளிடவும் திரும்பப் பெறவும் கணினிக்குள்ள திறன்.

Immediate access storage : உடனடி ஏற்புச் சேமிப்பு.

Immediate address : உடனடி செயலேற்பு ஆணை : ஒரு கட்டளை தொடர்பானது. அதன் முகவரிப் பகுதி செயல் பகுதியையும் உள்ளடக்கியதாக உள்ளது. அது முகவரியே அல்ல. கட்டளையின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட செயல்பாடாகும்.

immediate-mode-commands : உடனடி செயல்நிலை ஆணை : உடனடி முறைமைக் கட்டளைகள் : enter அல்லது return எனும் செயல் தொகுப்புக் கட்டுப்பாடு விசை அழுத்தப்பட்டதும் முறைமை மற்றும் தொகுப்பு ஆணைகள் நிறை வேற்றப்படும்.

immediate operand : நேரடி மதிப்புரு : சில்லு மொழி ஆணையைச் செயல்படுத்து கையில் பயன்படுத்தப்படும் ஒரு தரவு மதிப்பு. ஆணையிலேயே அம்மதிப்பு குறிப் பிடப்பட்டிருக்கும். ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு முகவரியின் மூலம் சுட்டப் படும் மதிப்பைக் குறிக்காது.

immediate printing : உடனடி ரரஅச்சிடல் : கணினியில் ஒர் உரைக் கோப்பினை அச்சுப் பொறிக்கு அனுப்புவதற்கு முன்பாக ஒர் அச்சுக் கோப்பாக சேமிக்கப்படுவதுண்டு. அல்லது இடைநிலையில் பக்க வடிவமைப்புச் செயல்முறை மேற் கொள்ளப்பட்டு அச்சுக்கு அனுப்பப்படுவதுண்டு. அவ்வாறில்லாமல் ஒர் உரையையும், அச்சிடுவதற்கான கட்டளைகளையும் நேரடியாக அச்சுப் பொறிக்கு அனுப்பும் முறைக்கு உடனடி அச்சிடல் என்று பெயர்.

IMO : ஐஎம்ஓ : என் கருத்தின்படி என்று பொருள்படும் In my opinion என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின்னஞ்சலில், இணையச் செய்தி/விவாதக் குழுக்களில் பயன்படுத்தப்படும் சுருக்கச் சொல். தாம் குறிப்பிடுவது நிச்சயம்ான ஒரு மெய்ம்மை யாக இருக்க வேண்டியதில்லை என்பதை அவரே ஒத்துக் கொள்ளும் ஒரு கூற்று.

impact print : தொட்டச்சு