பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/736

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Inactive

735

increase volume


சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப் பெயர்.

Imactive : செயலற்ற நிலை : பரிமாற்றம் தொடர்பானது. கணினியின் நினைவில் ஏற்றப்பட்டு ஆனால் இன்னும் நிறை வேற்றப்படாத ஒன்று.

Inactive window : செயளற்ற சாளரம் : பயன்படுத்தப்படாத சாளரம்.

செயளற்ற சாளரம்

செயளற்ற சாளரம்

in-band signalling : உள்-கற்றை சமிக்கை : ஒரு தரவு தொடர்புத் தடத்தில் பேச்சு அல்லது தகவலைக் கையாளும் அலை வரிசைக்குள்ளேயே அனுப்பி வைக்கப்படும் சமிக்கை.

Incidence Matrix : படு அணி : இரட்டைப் பரிமாண வரிசை. அது வரைபடம் ஒன்றின் ஒரங்களை வரையறை செய்கிறது. இணைப்புத் தளம் என்றும் அதனைக் கூறுவார்கள்.

Incident Light : படு வெளிச்சம் : ஒரு பொருள் ஒன்றின்மீது படுவது. வெளிச்சம் படு வெளிச்சத்தின் அலை வரிசைகளின் பிரதிபலிப்பு அல்லது ஈர்ப்புச் செயல்பாடு காரணமாக ஒரு பொருளின் வண்ணம் உணரப்படுகிறது.

include sub folders : உள் ஊறைகளிலும் தேடு.

Inclusive OR : அடங்கு அல்லது : உண்மையான பட்டியல் மதிப்பைத் தரும் பூலியன் செயல்பாடு. இதில் உண்மை மற்றும் அதனுடன் இணைந் துள்ள மாறுபாடுகள் உண்மை என்று தரப்படுகிறது. இப்பட்டியலில் அடங்கி யுள்ளவை உண்மை இல்லை என்றால் மதிப்பு பொய்யானதாகி விடுகிறது. Exclusive OR compare NOR, NOR, NAND, AND, and logical sum ஆகியவைகளுக்கு எதிரானது.

incoming data : உள்ளீட்டுத் தரவு;வரும் தரவு.

increase indent : ஓரச்சீர்மை மிகு.

increase speed : வேகம் கூட்டு.

increase volume : ஒலியளவு கூட்டு.