பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/737

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Increment

736

Independent computer



Increment : உயர்வு 1. மதிப்பு ஒன்றுடன் அல்லது அதன் மாறுபாடுகளுடன் சேர்க்கப்பட்ட அளவு. Decrement என்பதற்க்கு எதிரானது. 2. ஒரு வரைபட உள்ளிட்டு/வெளியீட்டுக் கருவியில் தொடர்பு கொள்ளக் கூடிய அருகில் உள்ள இரு புள்ளிகளுக்கு இடையில் உள்ள தூரம்.

Increment Back-up : கூட்டல் பின்பலம்; மேலேற்றுப் பின்பலம்; அதிகரிப்பு பின்பலம் : கடைசி பின்பல இயக்கத்திற்குப்பின் மாறிய கோப்புகளை மட்டுமே புதுப்பிக்கும் ஒரு பின்பல செயல்முறை. நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு இது பயனுள்ளது.

increment compiler : ஏறுமானத் தொகுப்பி, உயர்மானத் தொகுப்பி,

Incremental plotter : வளர் புள்ளி வரை கருவி ; பதின்ம முறைப் புள்ளியிடு கருவி : இது வரை பட தரவுகளை புள்ளியிடு முனையின் தொடர்பற்ற தன்னிச்சையான இயக்கத்தின் மூலம் வெளிப்படுத்துகிறது.

Incremental spacing : நுண் இடைவெளியிடல்

incrementing : மிகுத்தல்.

Indefinite iteration : நிச்சயமற்றுச் செய்தல்

indegree : உள்கோணம், உட்புகு எண் : ஒரு முனையை நோக்கிய பல விளிம்புகள். வெளிக் கோணத்துக்கு எதிரானது.

Indent உள்ளடக்கம்; உள் தள்ளு; ஒர் இடம் விடல் : பக்கத்தின் வலது அல்லது இடது ஒரத்திலிருந்து உள்ளே குறிப்பிட்ட இடவெளிவிட்டுத் துவங்குதல் அல்லது ஆவண உரையை நகர்த்துதல்.

indentation : பத்தி உள்ளடக்கம்; உள் தள்ளல்; ஆவண உரையின் முதல்வரி துவக்கத்தில் காணப் படும் காலி இடம். இது பத்தி ஒன்றின் துவக்கத்தைக் குறிப்பிடுகிறது.

independent : சுயேச்சையான; சார்பற்ற சார்பிலா.

Independent Computer Consultants Association : சுயேச்சையான கணினி ஆலோசகர்கள் சங்கம் : சுயேச்சையான கணினி ஆலோசகர்கள் சங்கத்தின் தேசிய இணைப்பு 1976இல் உருவாக்கப்பட்டது. தேசிய அமைப்பு மற்றும் உள்ளுர் பிரிவுகளின் உறுப்பினர்கள் மூலமாக கருத்துகள் பரிமாறப்பட்டுக் கணினி ஆலோசனைத் தொழிலில் ஒரு கூட்டுக் குரலாக மாறுகிறது.

Independent Computer Peripheral Equipment Manufacturers