பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/738

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Independent consultant

737

Indexed sequential


(ICPEM) : சுயேச்சையான கணினி புற இணைப்புச் சாதன தயாரிப்பாளர்கள் : கணினி சாதனங்களில் ஒன்றிரண்டு வகைகளைத் தயாரிப் பதில் சிறப்புத் திறன் உள்ள தொழிற்சாலைகளைக் கொண்ட நிறுவனம்.

Independent Consultant : சுயேச்சையான ஆலோசகர்.தகவல் சீரமைப்புத் துறையில் பயிற்சி உள்ளவர். வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தாற்காலிகமாகப் பணிபுரிகிறவர்.

independent, machine : பொறி சாரா : கணினிசாரா.

index : கோப்பு அட்டவணை;சுட்டு;வரிசைக் குறியீடு : 1. ஒரே விதமான அலகுகள் கொண்ட வரிசையில் ஒரு குறிப்பிட்ட அளவைக் குறிக்க உதவும் குறியீடு அல்லது எண். எடுத்துக் காட்டாக x 5 என்பது x வரிசையில் 5வது உள்ள பொருளைக் குறிப்பிடுகிறது. 2. சில வரிசை முறை சேமிப்பில் உள்ள குறியீட்டுப் பட்டியல். அதனை அணுகி தரவுத் தொகுப்பில் உள்ள பிற வகைகளின் முகவரி களைப் பெறலாம். எடுத்துக் காட்டாக வரைபடப் பட்டியலில் உள்ள வகைகள் அல்லது தரவு கோப்பில் புள்ளி விவரங்கள்.

indexed : சுட்டுவரிசைப்பட்டது.

Indexed Address : சுட்டு முகவரி; அட்டவணை முகவரி; குறியிடப்பட்ட முகவரி : கணினிக் கட்டளை ஒன்றை நிறைவேற்றும் பொழுதோ அதற்கு முந்தியோ குறியீட்டுப் பதிவேடு ஒன்றின் உள்ளடக்கத்தினால் மாற்றப்பட்ட முகவரி.

indexed search : வரிசைமுறைத் தேடல் : ஒரு தரவு தொகுதியில் ஒரு குறிப்பிட்ட தரவு குறிப் பைத் தேடிக் கண்டறியும் நேரத்தைக் குறைப்பதற் காக வரிசை முறைப்படுத்தலைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒருவகைத் தேடல் முறை.

Indexed Sequential Access Method (ISAM) : சுட்டுவரிசை அணுகுமுறை : குறியீட்டு வரிசைப்படுத்தப்பட்ட அணுகு முறை : நேரடி அணுகு கருவி யில் தரவுகளை வகைப்படுத்தும் வழிகள். தரவு ஆவணங்கள் எங்கே சேமிக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்ட உதவும் ஒரு அகர முதலித் தொகுப்பு அல்லது குறியீட்டுப் பட்டியல். குறியீட்டுப் பட்டியலின் உதவியுடன் விரும்பும் தரவு ஆவணத் தைப் பெறலாம். ஆவணத்தின் சுமாரான இருப்பிடத் தைக் குறியீட்டுப் பட்டியல் காட்டுகிறது. அல்லது நேரடி அணுகு கருவி


17