பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/739

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

indexer

738

index register


யில் தரவு துணுக்கின் இருப்பிடத்தைக் காட்டுகிறது.குறியீட்டுப் பட்டியலில் குறிப்பிடும் இடத்தில் தேவையான ஆவணத்தை அல்லது தரவுத் துணுக்கை கண்டுபிடிக்கும் வரை கணினி தேடுகிறது.

indexer:சுட்டு ஆக்க வரிசை: குறியீட்டு பட்டியல் தயாரிப்போர்:ஆவணம் ஒன்றுக்காக குறியீட்டுப் பட்டியல் ஒன்றை உருவாக்கும் நிரலாக்கத் தொகுப்பு.

Index File:பட்டியல் கோப்பு: NOX அல்லது NTX என்ற விரி வாக்கங்கள் உள்ள கோப்புகள். ஒரு தரவுத் தளத்தில் உள்ள பதிவேடுகளை ஒரு குறிப்பிட்ட முறையில் அணுகுவதற்கான தகவலை இது கொண்டுள்ளது.

Index hole:அட்டவணைத் துளை,குறியீட்டுத் துளை:குறி அட்டவணையீட்டுப் பட்டியல் துளை: மின் ஒளியியல் முறைமையால் அறியக்கூடிய துளையிடப்பட்ட வட்டு. இயக்கமுறைமையினால் தகட்டில் சுழிப் (பூஜ்யம்) பகுதி எங்கே துவங்கு கிறது என்பதைத் துல்லியமாக அறியலாம்.

அட்டவணைத் துளை

index hole sensor:பட்டியல் துளை உணர்வி; சுட்டுவரிசை உணர்வி.

indexing:சுட்டிணைப்பு வரிசை முறை: குறியீட்டு வரிசைப் படுத்துதல்: நிரலாக்கத் தொகுப்பு உத்தி,அதனால் கட்டளை ஒன்றை குறியீடு என்றழைக்கப்படும் அம்சத்தினால் திருத்தி அமைக்கலாம்.

Index mark:பட்டியல் அடையாளம்:' அட்டவ ணைக் குறி: பருப்பொருள் துளை அல்லது நாட்ச் அல்லது பதிவான குறியீடு அல்லது அடையாளம். வட்டில் உள்ள ஒவ்வொரு வழித் தடத்தின் ஆரம்பமுனையையும் அடையாளம் காட்டுவது.

Index register:அட்டவணைப் பதிவகம்: குறியீட்டுப் பதிவேடு ஆணை ஒன்றை நிறை வேற்றும்பொழுதோ அதற்கு முந்தியோ முகவரி ஒன்றிலிருந்து,பதிவேட்டின் உள்ளடக்கத்தோடு இன்னும் கூடுதலாகச் சேர்க்கலாம் அல்லது குறைக்கலாம்.