பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/740

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Index Sequential

739

Industrial data collection


Index Sequential : அட்டவணை எண் வரிசை : வரிசை முறைப் பட்டியல் : ஒரு தரவு ஒருங் கமைப்பு முறை. இதில் பதி வேடுகள் வரிசை முறைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டு ஒரு பட்டியல் மூலம் குறிப்பிடப் படும். நேரடி அணுகுக் கோப்புச் சாதனங்களில் பயன் படுத்தப்படும்போது, இதனை ISAM - Index Sequential Access Method என்று சொல்லலாம்.

index sequential access : சுட்டு வரிசைமுறை அணுகல் : ஏட்டு எண் வரிசை அணுகல்.

index sequential file : சுட்டு வரிசை முறைக் கோப்பு : ஏட்டு எண் வரிசைக் கோப்பு.

index variable : சுட்டுவரிசை மாறிலி.

Indicator : சுட்டிக்காட்டி; காட்டி; அடையாளங்காட்டி : கணினி ஒன்றின் நிலையைப் பதிவு செய்யும் கருவி.

Indirect addressing : மறைமுக முகவரியாக்கம்; மறைமுக முகவரியிடல் : நேரடி முகவரி அல்லது மறைமுக முகவரியைக் கொண்ட இருப்பிடத்தை சேமிப்பில் குறிப்பிட முகவரி ஒன்றைப் பயன்படுத்துதல். இதனை பல அடுக்கு முகவரி யிடல் என்றும் அழைப்பார்கள். Indirect mode : மறைமுக முறை.

Individual disks : தனித்த னி வட்டுகள்,

Indonet : இன்டோநெட் : 1986 இல் சிஎம்சி நிறுவனம் இந்தி யாவில் நிறுவிய பொதுத் தரவு இணையம்.

Induce : தூண்டல் : தூண்டல் மூலம் ஒரு மின்சார ஒட்டம் அல்லது மின் வலிமையைத் தூண்டல். களப் பாதிப்பு மின் மயப் பெருக்கியின் வாயிலில் தூண்டப்படும் மின்னோட் டம். மின்னோட்டப் பாதையில் சம மான மின்னோட்டத்தைத் தூண்டுகிறது.

Inductance : தூண்டுநிலை : மின் இணைப்பில், ஏற்கனவே உள்ள மின் அளவு அலகில் ஏற் படும் மாற்றத்தை எதிர்க்கும் பண்பு ஹென்றி எனப்படும்.

Induction : தூண்டல் : மின்சார மற்றும் மின்காந்தப் பண்புகளைக் கொண்ட பொருள். நேரடித் தொடர்பில்லாமல் அருகில் உள்ள பொருள் ஒன்றில் மின் னேற்றத்தை அல்லது மின் காந்தப் புலத்தை உருவாக்குதல்.

Industrial data collection device : தொழில் தரவு சேகரிப்புக் கருவி : ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்ய தொழிலாளி ஒருவர் எடுத்துக் கொள்ளும் நேரத்தை