பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/741

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Industrial espionage

740

Industrial robot


பதிவு செய்யும் உள்ளிட்டுக் கருவி. செய்யப்படும் வேலைகளுக்கான சம்பளத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்படுகிறது.

Industrial espionage : தொழில் துறை கள்ளம் : வெளியிடப்படாத, உரிமை பெற்ற தகவலை தவறாகப் பயன்படுத்தும் நோக்கத்துடன் நகலெடுத்தல் அல்லது திருடுதல். புதிய செயல்முறைகள், பொருள் வடிவமைப்புகள், விற்பனைத் திட்டங்கள் ஆகியவற்றையே பொதுவான இலக்காகத் திருடுகிறார்கள்.

Industrial robot : தொழில் துறை எந்திர மனிதன் : தொழில் துறை எந்திரன் : புதிய நிரல் தொகுப்புக்கு இடமளிக்கிற. பலபணிகளைச் செய்யக்கூடியது. பொருள்களை, கருவிகளை, சிறப்பான கருவிகளை திட்டமிடப்பட்ட இயக்கங்கள் மூலம் பல்வேறு பணிகளைச் செய்யக்கூடியது. மற்ற வகையான தானியக்கங்களைப் போல அல்லாமல் எந்திரன்கள் பல்வேறு வகையான பணிகளைச் செய்யும்படி நிரல் தொகுப்பை அளிக்கலாம். அதன் மூலம் அவற்றை இலகுவான தயாரிப்புக் கருவிகளாக மாற்றலாம். ரோபோக்களுக்கான நிரல் தொகுப்புகளை மாற்ற முடியுமாதலால் பல சாதகமான பயன்கள் உண்டு. மிகக்குறைந்த துவக்கச் செலவு மற்றும், குறைந்த மாசு நீக்கும் செலவுகள் காரணமாக எண் பிக்கப்பட்ட வடிவமைப்பும், ஒட்டுமொத்த தயாரிப்புச் செலவைக் குறைக்கும் பண்பையும் எந்திரன் கொண்டிருப்பதால் ஒரு நிறுவனம் அதன் இலாபத்தை அதிகரித்துக்கொள்ள முடிகிறது. மோட்டார் வாகனத் தொழில், விமானத் தொழில், வீட்டு உபயோக மின் அணுவியல் சாதனத் தயாரிப்பு, நுகர்வுப் பொருள்கள், சாலையில் செல்லாத வாகனங்கள் தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபடும் பெரிய தொழில் நிறுவனங்கள் தொழில் துறை எந்திரன்களைப் பயன்படுத்துகின்றன. அண்மைக்கால வளர்ச்சி காரணமாக எந்திரன்கள் கூடுதல் அறிவுடன் இயங்குகின்றன. எந்திரப்பார்வை, தொடுஉணர்வு, நகரும் திறன் காரணமாக பல வகையான தொழில்களுக்கு எந்திரன்கள் (ரோபோக்கள்) பொருத்தமானவை. ஜவுளித் தொழில், உணவு பதப்படுத்துதல், மருந்துப் பொருள் தயாரிப்பு, மேஜை நாற்காலி வகைகள் தயாரிப்பு, கட்டுமானத் தொழில், சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றில்