பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/742

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

inequality

741

Inference


மிகவிரைவில் எந்திரன்கள் பெருமளவு பயன்படுத்தப்படும். உற்பத்தி, உற்பத்தித்திறன் தொகுப்புகளில் எந்திரன்கள் பெருமளவு லாபம் தருவனவாக உள்ளன. அமெரிக்காவில் தொழில் நிறுவனங்களில் எந்திரன்களைப் பயன்படுத்துவதால் 20 முதல் 30 சதவீதம் உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது என்பதை அமெரிக்க வரலாறு காட்டுகிறது. எந்திரன்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் தற்பொழுது பயன்படுத்தப்படும் எந்திரங்களுக்கான நிலுவையைச் செலுத்துவதைத் துரிதப்படுத்த இயலும். அதேசமயம் எந்திர முதலீட்டுத் தேவைகளைக் குறைத்துக் கொள்ளமுடிகிறது. எடுத்துக்காட்டாக கூடுதலாக அழுத்த அச்சு எந்திரங்களையும் அல்லது எந்திரக் கருவிகளையும் வாங்குவதைவிட எந்திரன்களை வாங்குவது 20 முதல் 30 சதவீத கூடுதல் உற்பத்தி தருவதாக உள்ளது. சமமான செலவில் அல்லது கூடுதலான செலவில் குறைவான உற்பத்தித் திறன் உள்ள ஒரு எந்திரத்தை வாங்குவதை விட எந்திரன்களை வாங்குவதால் 20 முதல் 30 சதவீதம் உற்பத்தி திறன் உயர்கிறது.

Inequality : சமமின்மை : சமம் இல்லாத இரண்டு மதிப்பீடுகளின் வெளிப்பாடு. 'பி' யை விட 'ஏ' பெரியது, ஏ யை விட 'பி' பெரியது என்று கூறும் சமமின்மையை வெளிப்படுத்தும் இரண்டு வழிகளாகும். ஏ-க்கு பி-சமம் இல்லை என்பது சமமின்மையின் வரிசை முறையை வெளிப்படுத்தாது சமமின்மையை மட்டும் காட்டுகிறது.

infection : தொற்று : ஒரு கணினி அமைப்பு அல்லது முறைமையில் நச்சுநிரல் குடியேறியுள்ளதைக் குறிக்கும் சொல். ட்ரோஜான் குதிரை அல்லது நச்சுப்புழுவகையைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

inter : உய்த்துணர்; ஊகி : குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு. முறையான தருக்க விதிகளின்படியோ, பொதுவான கண்ணோட்டத்தின் அடிப்படையிலோ எடுக்கப்பட்டதாக இருக்கலாம். (எ-டு) பறவைகளுக்கு இறகுகள் உள்ளன. கானரி என்பது மஞ்சள் நிறமுடைய பாடும் பறவை. இந்த இரு கூற்றுகளின் அடிப்படையில் கானரிகளுக்கு இறகுகள் உண்டு என்பதை உய்த்து அறியலாம் அல்லவா?

Inference : முடிவறிதல்; உய்த்துணர்தல்; அனுமானம் : அறிந்த உண்மை மதிப்பீடுகளையுடைய