பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/745

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

information hiding

744

Information overload


பெறுபவருக்கும் இடையில் பயணத்தில் உள்ள எழுதப்பட்ட கடிதம் அல்லது பிற ஆவணம். இந்த பயணத்தின்போது எந்த நடவடிக்கைக்கும் அல்லது பதில் தரவும் அது கிடைப்பதில்லை.

information hiding : தகவல் மறைப்பு : பொருள்நோக்கு நிரலாக்கத்தில் ஒரு கருத்துரு ஒரு தரவுக் கட்டமைப்பு மற்றும் செயல்கூறுகள் என்ன செய்யும் என்பதே அதைப் பயன்படுத்தும் நிரலருக்குத் தெரியும். எப்படிச் செய்யும் என்கிற தரவு மறைக்கப்பட்டிருக்கும். அத்தகைய செயல்கூறுகள் குறிப்பிட்ட செயலாக்க முறையைச் சார்ந்து இருப்பதில்லை. ஒரு நிரல் கூறு அல்லது துணைநிரல் செயல்படும் முறையை அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் நிரல்களுக்குச் சார்பின்றி மாற்றயமைத்துக் கொள்ள தரவு மறைப்பு கோட்பாடு உதவுகிறது.

information highway : தகவல் பெருவழி; தகவல் நெடுஞ்சாலை. Information Industry : தகவல் தொழில் : நேர்முகப் பணிகள் மூலமோ அல்லது வட்டுகள் மூலம் விநியோகிக்கப்பட்டோ அல்லது சிடி ரோம் மூலமோ தகவல் வழங்கும் நிறுவனங்கள். அனைத்து கணினிகள், தகவல் தொடர்புகள், மின்னணு தொடர்புள்ள நிறுவனங்கள், வன்பொருள், மென்பொருள் மற்றும் பணிகளும் இதில் அடங்கும்.

Information management : தகவல் மேலாண்மை : தரவுவை ஒரு நிறுவனத்தின் மூலாதாரமாக ஆராயும் துறை. கணினியால் செயலாக்கப்பட்டாலும் இல்லையென்றாலும் ஒரு நிறுவனத்தில் உள்ள அனைத்து தரவுகள் மற் றும் தகவல்கள் பற்றிய விளக்கங்கள், பயன்கள், மதிப்பு மற்றும் விநியோகமும் இதில் அடங்கும். ஒரு நிறுவனம் திறம்பட முன்னேறவும் செயல்படவும் எத்தகைய விவரங்கள் தரவுகள் தேவைப்படுகின்றன என்பதை இது ஆராய்கிறது. கணினி தீர்வுகளை உருவாக்குவதற்குமுன் தேவைப்படும் தரவுவை ஆராய்ந்து அறிய வேண்டும்.

Information networks : தகவல் பிணையம் : பூமியில் பல்வேறு பகுதிகளில் உள்ள நூலகங்கள் மற்றும் தரவு மையங்களை, அவற்றின் தள முழுத் தகவல் ஆதாரங்களை மேலும் அதிகமான மக்களிடையே பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட தொலைத் தகவல்கள் மூலமான இணைப்பு.

Information overload : தகவல் மிகைப்பளு : திறமுடன் ஏற்றுக்