பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/749

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

infrastructure

748

INIT


அச்சுப்பொறிகளில் அகச் சிவப்புத் துறைகள் வந்துவிட்டன. தகவல் தொடர்பில் ஈடுபடும் இரண்டு சாதனங்களின் துறைகள் நேராகப் பார்த்துக்கொண்டிருப்பது கட்டாயம்.

infrastructure : உள் கட்டமைப்பு.

Inherent error : உள்ளார்ந்த பிழை : நிச்சயமற்ற அளவுகள், அப்பட்டமான தவறுகள், குறைவான பதின்ம நிலைகளினால் கரிக்கப்பட்ட மதிப்பீடு ஆகியவற்றின் பிழையான துவக்க மதிப்பீடுகளைக் கொண்ட கணினிப் பிழை.

inheritance : வாரிசுரிமை : பொருள் சார்ந்த நிரல் தொடரமைத்தலின் முதலாவது வகுப்பின் உடன்பிறந்த தன்மைகளை வேறொரு வகுப்புப் பொருள்கள் பெறும் திறன்.

inheritance code : மரபுரிமக் குறிமுறை : பொருள்நோக்கு நிரலாக்கத்தில், ஒரு பொருளுக்குரிய கட்டமைப்பு மற்றும் செயல்முறைக் கூறுகளையும் குறிக்கிறது. எந்த இனக்குழுவிலிருந்து இப்பொருள் மரபுரிமையாக உருவாக்கப்பட்டதோ, அந்த இனக்குழு அல்லது அதன் பொருளிலிருந்து இவை அனுப்பி வைக்கப்பட்டவை ஆகும்.

inhibit : தடைசெய் : ஒரு நிகழ்வினைத் தடுத்தல். (எ-டு) கணினியின் புறச்சாதனம் ஒன்றின் குறுக்கீடுகளை (interrupts) தடை செய்தல். அதாவது, அப்புறச்சாதனம் எவ்விதக் குறிக்கீடுகளையும் அனுப்புவதை தடைசெய்வது என்று பொருள்.

In-house : வீட்டுக்குள் : தன்னுடைய சொந்த மூலாதாரங்களைக் கொண்டு ஒரு நிறுவனம் செய்து முடிக்கின்ற நடவடிக்கைகள்.

. ini : ஐஎன்ஐ : டாஸ் மற்றும் விண்டோஸ் 3. x இயக்கமுறைமைகளில் இயக்கத்தை தொடங்கிவைக்கும் முக்கிய கோப்பினை அடையாளங் காட்டும் வகைப்பெயர் (File Extension). பெரும்பாலும் பயனாளரின் விருப்பத் தேர்வுகளையும், ஒரு பயன்பாட்டுத் தொகுப்பின் தொடக்க நிலைத் தகவல்களையும் ஐஎன்ஐ கோப்பு தன்னகத்தே கொண்டிருக்கும்.

INIT : தொடக்கு இனிட் : 1. பழைய மெக்கின்டோஷ் கணினிகளில், கணினியை இயக்கும்போது நினைவகத்தில் ஏற்றிக் கொள்ளப்படும் முறைமையின் துணைநிரல். 2. யூனிக்ஸ் இயக்கமுறைமையில், முறைமை நிர்வாகி செயல்படுத்தும் ஒரு கட்டளை. 3. ஜாவா குறுநிரல்