பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

anomaly

74

anonymous FTP


 anomaly : முரண் : இயல்புக்கு மாறானது.


anonymity : பெயர் மறைப்பு; பெயர் ஒளிப்பு; பெயரிடாமை : இணையத்தில் மின்னஞ்சல் அல்லது செய்திக் குழுவில் தகவல் அல்லது கட்டுரை அனுப்பும்போது, அனுப்பியவர் எவர் என்பதைப் பெறுபவர் தெரிந்து கொள்ள முடியாதவாறு அனுப்பி வைக்கும் முறை. இணையத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றத்தில் பொதுவாக அனுப்பு பவரின் மின்னஞ்சல் முகவரி தகவலின் தலைப்புப் பகுதியில் இடம்பெறும். தகவல் பரிமாற்றத்துக்கான கிளையன் அல்லது கேட்பன் (client) மென் பொருள்தான் இந்த முகவரியைத் தகவலின் தலைப்பில் இடும். பெயர் மறைப்புச் செய்ய, ஒரு பெயர் மறைப்பு மறு மடல் வழங்கன் மூலம் செய்தியை அனுப்பி வைக்க வேண்டும். செய்தியைப் பெறுபவர், பதில் அனுப்ப வசதியாக அனுப்பியவரின் முகவரி, வழங்கன் கணினியில் சேமித்து வைக்கப் பட்டிருக்கும். செய்தியைப் பெறுபவர் அனுப்பியவர் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாதே யொழிய பதில் அனுப்ப முடியும்.


anonymous : அனானிமஸ் : பெயரிலி : இணையத்திலுள்ள எவரும் இலவசமாகப் பயன் படுத்திக் கொள்ளும் வகையில் பல்வகைக் கோப்புகளைச் சேமித்து வைத்துள்ள எஃப்டிபி தளங்கள் பல உள்ளன. இணையப் பயனாளர் ஒருவர் இத்தகைய தளங்களை அணுகப் பயன்படுத்தும் அணுகுப் பெயர் "பெயரிலி" எனப் பொருள்படும். "அனானிமஸ் என்ற பெயராகும்.


anonymous FTP : அணுகுப் பெயரிலா ஆவணச் சேமிப்பகம், பொதுப்பயன் எஃப்டிபீ தளம் : இணையத்தில் எவ்வளவோ தகவல்கள் எல்லோரும் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இணையத் தகவல் பரி மாற்றத்தில் கோப்புப் பரிமாற்ற நெறிமுறை (File Transfer Protocol) என்பது ஒருவகை. இந்த அடிப்படையில் கோப்புப் பரிமாற்றம் கொள்ள வாய்ப்பளிக் கும் தளங்கள் எஃப்டிபீ தளங்கள் என்றழைக்கப்படுகின்றன. பொதுவாக பிணையத்திலுள்ள (network) ஒரு சேமிப்பகக் கணினியை அணுக பெற்றிருக்க வேண்டும். உரிய அணுகு பெயரையும் நுழை சொல்லையும் தந்தபிறகே தளத்தை அணுக முடியும். ஆனால் இைையத் திலுள்ள பல எஃப்டிமீ தளங்களை அனானிமஸ் அல்லது