பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/750

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

initial base font

749

initial programme load


களில் (Applets) கட்டாயமாக இடம்பெறும் முக்கிய வழிமுறை. குறுநிரல் அழைக்கப்படும்போது இந்த வழிமுறை இயக்கப்படும்.

initial base font : தொடக்க தள எழுத்துரு.

initial graphics exchange specification : தொடக்க வரைகலைப் பரிமாற்ற வரன்முறை : அமெரிக்க தேசிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (ANSI) ஆதரவு பெற்ற கணினி வரைகலைக் கோப்பு வடிவாக்கத் தரம். குறிப்பாக, கணினியுதவு வடிவமைப்பு (CAD) நிரல்களில் உருவாக்கப்பட்ட மாதிரியங்களைக் கையாள இது ஏற்றதாகும். அடிப்படையான வரை கணித வடிவங்களை உள்ளடக்கியது. கணினியுதவு வடிவமைப்பின் குறிக்கோள்களுக்கு இசைவானது. உரை விளக்க வரைபடங்கள், பொறியியல் வரைபடங்கள் ஆகியவற்றுக்கு உகந்தது.

initialization : தொடக்கி வைத்தல்; தொடக்க மதிப்பிருத்தல்; தொடக்க நிலைப்படுத்தல் : ஒரு நிரலில் மாறிகளிலும், தரவுக் கோவைகளிலும் தொடக்க மதிப்புகளை இருத்தி வைக்கும் செயல்பாடு.

initialization list : தொடக்க மதிப்பிருத்தும் பட்டியல்.

initialization portion : தொடக்கி வைக்கும் பகுதி.

initialization string : தொடக்கி வைக்கும் சரம் : ஒரு புறச்சாதனத்துக்கு, குறிப்பாக ஓர் இணக்கிக்கு அனுப்பி வைக்கப்படும் தொடர்ச்சியான கட்டளைகளின் தொகுப்பு. இணக்கியைச் செயல்பட வைக்கத் தயார் செய்யும் கட்டளைகள்; பெரும்பாலும் எழுத்துகளைக் கொண்ட சரமாக இருக்கும்.

initialize : தொடக்க மதிப்பளிப்பு : ஒரு தகடு ஒன்றைத் தயாரிப்பதற்கான கணக்கீட்டைத் துவங்குமுன் சரியான துவக்க மதிப்பீடுகளை அல்லது ஜன்னலை, மாறுபாடுகளை முன்னரே தீர்மானித்தல்.

initializer : தொடக்க மதிப்பிருத்தி : ஒரு மாறிலியின் தொடக்க மதிப்பாக அமையும் மதிப்பினை தரக்கூடிய கணக்கீட்டுத் தொடர்.

initial programme load : தொடக்க நிரல் ஏற்றம் : ஒரு கணினி இயக்கி வைக்கப்படும்போது, ஓர் இயக்க முறைமையை நினைவகத்தில் ஏற்றி எழுதிக்கொள்ளும் செயல்முறை.