பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/756

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Input programme

755

Inquiry station


Input programme : உள்ளீட்டு நிரல் தொடர் : Data Entry Programme பொன்றது.

Input queue : உள்ளீட்டு வரிசைமுறை : நினைவகம் அல்லது வட்டில் வந்துள்ள செய்திகளை வைத்துக் கொண்டிருக்கும் ஒதுக்கப்பட்ட பகுதி. செய்ய வேண்டிய வேலைகளைக் குறிக்கும் வேலைக்கட்டுப்பாட்டு வாக்கியம்.

Input statement : உட்பாட்டு அறிக்கை;உள்ளிட்டுக் கட்டளை.

Input stream : உள்ளீட்டுத் தொடர் : இயக்குவோரால் குறிப்பிட்ட நோக்கத்துக்காக செயல் முறைப்படுத்தப்பட்ட உள்ளீட்டுப் பிரிவுக்காக வரிசையாக அனுப்பப்படும் அறிக்கைகள் மற்றும் தரவுகள். பணித் தொடர் போன்றது.

inputting : உள்ளிடுதல் : கணினி முறைமை ஒன்றுக்கு தரவுகளை அனுப்பும் முறை.

Input unit : உள்ளீட்டகம்;உள்ளிடு கருவி.

Inquire PAC : உசாவல் பீஏசி : கணினியில் கம்மோடர் 64 இல் பயன்படுத்தப்படும் மென்பொருள். ஒழுங்குபடுத்தப்பட்ட தரவுவைக் கொண்ட மின்னணுக் கோப்புப் பெட்டியை உருவாக்க இது உதவுகிறது.

Inquiry : உசாவல்;ஆய்வு : சேமிப்பிலிருந்து தரவு ஒன்றினை பெறு வதற்கான வேண்டு கோள். எடுத்துக்காட்டு : விமான நிறுவனம் ஒன்றின் ஒதுக்கீட்டு முறைமையில் கிடைக்கக்கூடிய இருக்கை எவ்வளவு? என்பது போன்ற வேண்டுகோள்.

Inquiry processing : உசாவல் செயலாக்கம் : கோப்பு ஒன்றிலிருந்து ஒரு ஆவணத்தைத் தேர்வு செய்து அதன் உள்ளடக்கத்தை உடனடியாக வெளிப் படுத்தும் நடைமுறை.

Inquiry programme : உசாவல் நிரல் தொடர்.

Inquiry screen : உசாவல் திரை : திரை வடிவமைப்புக்கொள்கை. விரைவான தரவு திரும்பப் பெறல் தேவைப்படுகையில், பயனாளர் கணினி அறிவு பெற்றவராக இல்லாத நிலை. பெரிய நூலகங்களில் தலைப்பு/ பொருள்/ஆசிரியர் முறையில் நூல்களைக் கண்டுபிடிப்பதற்குப் பொதுவாகப் பயன் படுத்தப்படுகிறது.

Inquiry station : ஆய்வு நிலையம் : ஆய்வு மேற்கொள்வதற்கான கருவி. அக்கருவி கணினியிலிருந்தோ கணினியின் விசை முனையத்திலிருந்தோ தொலைவில் இருக்கக் கூடும்.